ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று நாளையும் பொது விடுமுறை.. ஹைதராபாத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. கேடிஆர்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மழையால் மொத்த நகரமும் வெள்ளத்தில் மிதக்கிறது. அம்மாநில அரசு இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அம்மாநில முதல்வரின் மகனும் அமைச்சருமான கேடிஆர் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

    ஹைதராபாத்தில் பலத்த மழை.. கோர தாண்டவம் ஆடிய வெள்ளம் - வீடியோ

    கடந்த 48 மணி நேரமாக ஹைதராபாத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெலுங்கானா அரசின் முதன்மை செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு) அரவிந்த்குமார் அறிவித்துள்ளார்.

     Hyderabad rains: Two-day holiday declared, citizens to not come out of their home

    ஹைதராபாத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் ஹைதராபாத் நகரில் வீடு இடிந்து விழுந்து 2 மாத குழந்தை உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர், இதேபோல் இன்னாரு இடத்தில் பாறை விழுந்து 3 பேர் பலியாகினர்.

    ஹைதராபாத்தில் வரலாறு காணாத வெள்ளம்.. சென்னையில் ஏற்பட்ட அதே பாதிப்பு.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி ஹைதராபாத்தில் வரலாறு காணாத வெள்ளம்.. சென்னையில் ஏற்பட்ட அதே பாதிப்பு.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி

    இதனிடையே ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அம்மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்..

     Hyderabad rains: Two-day holiday declared, citizens to not come out of their home

    மேலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்படும் என்றும் ராமராவ் கூறினார். வீடற்ற நபர்களை உடனடியாக அரசின் நிவாரண முகாம்களுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். கட்டுமான இடங்களை ஆய்வு செய்யவும், விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும் நகர திட்டமிடல் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.. பாழடைந்த கட்டிடங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

     Hyderabad rains: Two-day holiday declared, citizens to not come out of their home

    இதனனிடையே ஹைதராபாத்தில் அவசர உதவிக்கு தொலைப்பேசி எண்களை மாநில அரசு அறிவித்துள்ளது

    • அவசர உதவி எண் 100
    • ஹைதராபாத் பேரிடர் மேலாண்மை துறை 9000113667
    • மரங்களை அகற்ற 6309062583
    • வெள்ளம் வடிகால் செய்ய Cell 9000113667
    • மின்சார உதவி 9440813750
    • M.C.H பேரிடர் உதவி 97046018166
    • என்டிஆர்எப் உதவி 8333068536

    English summary
    The State government declared a holiday for government and private institutions on Wednesday and Thursday, in view of the relentless rainfall that lashed Hyderabad for the past 48 hours, resulting in widespread inundation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X