ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 நாளாச்சு ரோஹிதா காணாமல்போய்.. செல்போன் இல்லை.. சிசிடிவி கேமிராவும் இல்லை.. விழிபிதுங்கும் போலீஸ்

ஐடி பெண் ஊழியரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இன்னையுடன் 10 நாள் ஆச்சு ரோஹிதா காணாமல் போய்.. ஆனால் அவர் எங்கே இருக்கிறார்.. என்ன ஆனார் என்று தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி உள்ளனர்.. இந்த விவகாரம் தற்போது தெலுங்கானாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ரோஹிதா.. 34 வயதாகிறது.. இவர் கடந்த 26-ம் தேதி காணாமல் போய்விட்டார்.

இதனால் பதறிபோன பெற்றோர் பல இடங்களிலும் ரோஹிதாவை தேடினர்.. இறுதியில் போலீசில் புகார் தந்தனர். ஆனால் அவர் காணாமல் போய் இன்றுடன் 10 நாள் ஆகிறது..

ஒரே நேரத்தில் 2 பேருடன் காதல்.. வெட்டி கொண்ட கள்ள காதலர்கள்.. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஒரே நேரத்தில் 2 பேருடன் காதல்.. வெட்டி கொண்ட கள்ள காதலர்கள்.. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு

வுமன் விஷன்

வுமன் விஷன்

இது சம்பந்தமான எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை என்று ரோஹிதாவின் பெற்றோரே குற்றஞ்சாட்டுகின்றனர். போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் பகிரங்கமாக சொல்கிறார்கள். அதனால் போலீசுக்கு அடுத்தகட்டமாக சோஷியல் மீடியாவில் "வுமன் விஷன்" என்ற பதிவில் உதவி கேட்க தொடங்கி உள்ளனர்..

கண்ணீர்

கண்ணீர்

ரோஹிதா பற்றின தகவல் கிடைத்தால் சொல்லும்படி கண்ணீர்மல்க கேட்டுக் கொண்டுள்ளனர்.. ஒரு அபார்ட்மெண்டில் நண்பர்களுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார் ரோஹிதா.. ஆனால் சம்பவ தினத்தன்று எங்கே வெளியில் கிளம்பி சென்றவர்தான் காணாமல் போனார்.. இவர் காணாமல் போய் 3 நாள் கழித்துதான் அதாவது 29-ம் தேதிதான் போலீசில் புகார் தந்துள்ளனர்.

ஆட்டோ

ஆட்டோ

எப்படியாவது ரோஹிதாவின் செல்போனை வைத்து ட்ரேஸ் செய்துவிடலாம் என்றுதான் போலீசார் நினைத்தனர்.. ஆனால் அவர் கிளம்பி செல்லும்போது வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு போயுள்ளார்.. ஒரு ஆட்டோவில் ஏறி காச்சிபவுலி பகுதியில் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால் அதற்கு பிறகு அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லையாம்.

எங்கே இருக்கிறார்?

எங்கே இருக்கிறார்?

இந்த வழக்கின் சிக்கலுக்கு இன்னொரு காரணம், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லையாம்.. அதனால்தான் ரோஹிதாவை கண்டுபிடிப்பதில் சிரமமாக உள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இப்போதைக்கு 2 தனிப்படை அமைத்து ரோஹிதாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினாலும்.. 10 நாள் ஆன நிலையில் ஒரு பெண் எங்கே இருக்கிறார், என்ன ஆனார் என்ற பெரும் அதிர்வுகள் தெலுங்கானாவில் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

English summary
hyderabad techie rohita kuthuru missing case issue and her family seeks public & social media support
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X