ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலவில் நிலாச்சோறு.. சாத்தியமே!.. நிலவில் 5 ஏக்கர் வாங்கிய இந்தியர்.. சந்திரயான் குறித்து பெருமிதம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan-2 | நிலவில் இடம் வாங்கிய இந்தியர்.. சந்திரயான் குறித்து பெருமிதம்! - வீடியோ

    ஹைதராபாத்: சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பினாலும் அனுப்பியது ஏதோ டவுன் பஸ்ஸை அங்கு அனுப்பிவிட்டதாக கருதி ஹைதராபாத்தை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக கூறி வருகிறார்.

    நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 22-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி புவி வட்டப்பாதையிலிருந்து விலகி நிலவுக்கு புறப்படும்.

    இது ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடையும். இந்த நிலையில் நிலவில் 5 ஏக்கர் இடம் வாங்கிய ராஜீவ் பக்தி, நிலவில் கால் பதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிலம் வாங்கியதாக கூறி வருகிறார்.

    எடியூரப்பா தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானம், சட்ட விரோதமானது.. சட்டசபையில் சித்தராமையா விளாசல் எடியூரப்பா தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானம், சட்ட விரோதமானது.. சட்டசபையில் சித்தராமையா விளாசல்

    பேசு பொருளாகியுள்ள ராஜீவ்

    பேசு பொருளாகியுள்ள ராஜீவ்

    ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜோதிடர் மற்றும் பங்குச் சந்தை நிபுணராக உள்ளவர் ராஜீவ்பக்தி. இவர் 2003-ஆம் ஆண்டில் நிலவில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக கூறியிருந்தார். தற்போது சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் பேசு பொருளாகியுள்ளார்.

    வாழ்த்துகள்

    வாழ்த்துகள்

    2003-ஆம் ஆண்டு நிலவில் 5 ஏக்கர் நிலத்தை 140 டாலருக்கு நியூயார்க்கை சேர்ந்த லூனார் சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு எனது வாழ்த்துகள்.

    ஆர்வம்

    ஆர்வம்

    நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2030-ஆம்ஆண்டுக்குள் வெற்றிக்கரமாக முடிக்கப்படும் என நினைக்கிறேன். மேலும் நான் ஏன் நிலவு குறித்த விஷயத்தில் இத்தனை ஆர்வமாக இருக்கிறேன் என தெரியவில்லை.

    முட்டாள்

    முட்டாள்

    கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2003-ஆம் ஆண்டு நிலவில் இடம் விற்பனைக்கு இடம் என்ற செய்தியை பார்த்துவிட்டு அதை நன்கு ஆராய்ந்து நிலவில் இடம் வாங்கினேன். நான் முதலில் வாங்கியபோது என்னை எல்லோரும் முட்டாள் என கூறினர்.

    நனவு

    நனவு

    20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா செல்வது என்பது கனவாகவே இருந்தது. ஆனால் இப்போதே ஒரு குடும்பத்தில் ஒருவராவது சென்றுவிடுகின்றனர். எனவே அது போல் இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில் நிலவில் மக்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.

    உறவினரும் கூட

    உறவினரும் கூட

    நிலவில் ராஜீவ் பக்தி வாங்கிய இடத்துக்கு மேரே இம்பிரியம் என பெயரிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து உறவினர் லலித் மோஹதாவும் வாங்கியுள்ளார். இது போல் லட்சக்கணக்கானோர் நிலவில் இடம் வாங்கியுள்ளதாகவும் ராஜீவ் கூறியுள்ளார்.

    English summary
    Hyderabadi Astrologer Rajeev V Bagdi says that his dream comes true as Chandrayaan 2 success, as he bought land in moon in the year of 2003.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X