ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவை எப்படி தடுத்தோம் பாருங்க.. மத்த மாநிலங்களும் கத்துக்கோங்க.. தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பாஜக வெற்றி பெறுவதை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதை ஹைதராபாத் தேர்தல் முடிவுகள் காண்பித்துள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 150 வார்டுகளில் 55 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி பெற்றுள்ளது. 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. அது போல் ஏற்கெனவே இருந்த 44 இடங்களை அசாதுதீன் ஒவைசியின் மஸ்லீஸ் கட்சி தக்க வைத்துக் கொண்டது.

Hyerabad has shown how to stop BJP come to power, says Kavitha

கடந்த தேர்தலில் டிஆர்எஸ் கட்சி 99 இடங்களில் வென்றது. அது போல் பாஜகவோ வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. 2016-ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது டிஆர்எஸ் கட்சிக்கு 40 சதவீதம் சறுக்கல் ஆகும்.

இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆங்கில ஊடகத்திற்கு கூறுகையில் பாஜக தலைவர்கள் ஹைதராபாத் வந்து வாக்காளர்களை குழப்பினார்கள். எல்லா இடங்களிலும் குழப்புவது பாஜகவின் தந்திரமாகும். 2023-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னெடுப்பதில் நாங்கள் ஒரு படி மேல் இருக்கிறோம்.

விடாது கருப்பாக துரத்தும் டிரம்ப்.. ஜோ பிடன் வெற்றியை எதிர்த்து ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்குவிடாது கருப்பாக துரத்தும் டிரம்ப்.. ஜோ பிடன் வெற்றியை எதிர்த்து ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு

நாங்கள் வலிமையற்ற கட்சி அல்ல. நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட கட்சி, 60 லட்சம் தொண்டர்கள் உள்ளனர். நிச்சயம் 2023 சட்டசபை தேர்தலிலும் ஆட்சியை பிடிப்போம். பாஜக மிகப் பெரிய கட்சியாக உருவெடுப்பதை நாங்கள் தடுத்தோம்.

இந்த பாடத்தை எங்கள் கட்சியிடம் இருந்து மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பாஜகவை தடுக்க ஹைதராபாத் ஒரு வழியை காண்பித்துவிட்டது என்றார் கவிதா.

English summary
Telangana's CM Chandra Sekara Rao's daughter Kavitha says that Hyderabad has shown how to stop BJP to come to power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X