ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை.. நான் சாகட்டுமா? சிஏஏவிற்கு எதிராக கேசிஆர்.. விரைவில் தீர்மானம்!

தெலுங்கானாவில் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முடிவு எடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவில் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முடிவு எடுத்துள்ளார்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவில் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.முதலில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த மாநிலம் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிஏஏவை அமல்படுத்த மாட்டோம் என்றும் கேரள மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. கேரளாவை தொடர்ந்து பாஜக அரசு ஆட்சி செய்யாத பல மாநிலங்களில் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனைக்கு விரைந்தனர்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனைக்கு விரைந்தனர்!

தெலுங்கானா

தெலுங்கானா

இந்த நிலையில் தெலுங்கானாவில் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் சட்டசபையில் பேசினார். அதில் புதிய என்பிஆர் விதியின் மூலம், பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழை மத்திய அரசு கேட்கிறது. இது மிக மிக தவறு.

உண்மை என்ன

உண்மை என்ன

உண்மையை சொன்னால் எனக்கும் கூட பிறப்பு சான்றிதழ் இல்லை. நான் எந்த நாடு என்று கேட்டால் எப்படி அதை நிருபிப்பேன். நான் என்ன சொல்வேன். நான் என்னுடைய கிராமத்தில், என்னுடைய வீட்டில் பிறந்தேன். அப்போது அங்கு மருத்துவமனை இல்லை. எனக்கு பிறப்பு சான்றிதழே இல்லை. எனக்கு பிறந்த போது எழுதிய ஜாதகம் மட்டும்தான் இருக்கிறது.

பிறப்பு சான்றிதழ்

பிறப்பு சான்றிதழ்

இதைத்தான் பிறப்பு சான்றிதழ் போல பயன்படுத்தி வந்தனர். வேறு சான்றிதழ் எதுவும் என்னிடம் இல்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும். நான் சாக வேண்டுமா? எனக்கே பிறப்பு சான்றிதழ் இல்லாத போது, என் அப்பாவிற்கு பிறப்பு சான்றிதழ் எப்படி கிடைக்கும். நான் பணக்கார வீட்டில் பிறந்தவன். எங்கள் வீடு 580 ஏக்கரில் அமைந்து இருந்தது.

எனக்கு இல்லை

எனக்கு இல்லை

எனக்கே மருத்துவ வசதியோ, பிறப்பு சான்றிதலோ இல்லை. ஏழை மக்களிடம் அந்த சான்றிதழ்களை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும். தலித் மக்கள் எப்படி இந்த சான்றிதல்களை வைத்து இருப்பார்கள். இந்தியாவில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. இது மிக மிக தவறு. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆரை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். உலக மேடையில் இதனால் இந்தியாவின் மதிப்பு குறைந்துள்ளது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

உலக நாடுகள் இதனால் இந்தியாவை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளது. ஐநா இந்தியாவை கண்டித்துள்ளது. உலகம் முழுக்க இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக நாங்கள் தீர்மானம் கொண்டு வருவோம். விரைவில் இதற்கான தீர்மானம் அவையில் தாக்கல் செய்யப்படும். வரும் நாட்களில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்.

English summary
‘I don't have Brith Certificate, Should I die’, says KCR decides to bring resolution against CAA and NRC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X