ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் மீது எந்த கோபமும் இல்லை.. ஜெகன்மோகன் திடீர் அறிவிப்பு.. ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பம்

காங்கிரஸ் மீது எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை, அவர்கள் மீது எனக்கு வருத்தமும் இல்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் மீது எந்த கோபமும் இல்லை - ஜெகன்மோகன் அறிவிப்பு

    ஹைதராபாத்: காங்கிரஸ் மீது எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை, அவர்கள் மீது எனக்கு வருத்தமும் இல்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    என் அப்பாவின் தியாகத்தை அவமதித்தனர், தெலுங்கானாவை பிரித்து ஆந்திராவை கூறு போட்டார்கள்.. இதுதான் ஜெகன்மோகன் ரெட்டி தனது சகோதரி மற்றும் தொண்டர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் போது கூறியது.

    2009ல் ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின், காங்கிரஸ் கட்சியில் இருந்த அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிளவு ஏற்பட தொடங்கியது.

    ஏன் பாட்டி போலீஸை விட்டு அப்பாவை மிரட்டறீங்க.. கிரண்பேடி பேத்தியின் பளீர் கேள்விஏன் பாட்டி போலீஸை விட்டு அப்பாவை மிரட்டறீங்க.. கிரண்பேடி பேத்தியின் பளீர் கேள்வி

    எப்போது

    எப்போது

    அப்பாவின் நினைவாக ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய பேரணிக்கு காங்கிரஸ் கடுமையான கண்டங்களை தெரிவித்தது. அதே சமயம் ஆந்திராவில் தெலுங்கானா போராட்டமும் பெரிய அளவில் நீடித்து வந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தனது சொந்த எம்பியான ஜெகன்மோகன் ரெட்டியை நேரடியாக விமர்சனம் செய்தது.

    பிரிவு

    பிரிவு

    இந்த பிரச்சனைகள் தொடர்ந்து நடக்கவே 2010ல் ஆந்திரா பிரிவிற்கு காங்கிரஸ் தலையாட்டியது. தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இந்த கோபத்தில்தான் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்தார். அதன்பின் 2009ல் இருந்து இயங்கி கொண்டு இருந்த சிறிய கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் 2010ல் சேர்ந்து தலைவரானார்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இந்த நிலையில்தான் தற்போது தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், தெலுங்கு தேசம் என்ற வரிசையாக அனைத்து கட்சிகளையும் ஜெகன் மோசமாக விமர்சனம் செய்து வந்தார். ஆனால் புதிய திருப்பமாக காங்கிரஸ் மீதான கோபம் எனக்கு தணிந்துவிட்டது. காங்கிரஸ் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதை எல்லாம் தாண்டி நான் வந்துவிட்டேன் என்று ஜெகன் மோகன் கூறியுள்ளார்.

    புதிய டிவிஸ்ட்

    புதிய டிவிஸ்ட்

    இதன் மூலம் ஆந்திராவில் காங்கிரஸ் - ஜெகன்மோகன் ரெட்டி கூட்டணி அமைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கிறது என்பதை பொறுத்தே அங்கு ஆட்சி அமையும்.

    ஜெகன்மோகன் ரெட்டி

    ஜெகன்மோகன் ரெட்டி

    அதனால்தான் இப்போதே ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசுக்கு தூதுவிட்டுவிட்டார் என்று கூறுகிறார்கள். அதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே இருக்கிறார். ராகுலும் அவரும் இப்போதும் நெருக்கமாகவே இருப்பதால் ஆந்திர பிரதேச அரசியலில் மிக குழப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    English summary
    I have forgiven Congress party, I have no anger with them says YSRP chief Jaganmohan Reddy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X