ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கார்டில் இயேசுநாதர்.. வைரலாகும் போட்டோ.. டிடிபி மீது ஜெகன் கட்சி பாய்ச்சல்.. ஆந்திரா களேபரம்!

ரேஷன் கார்டில் இயேசு நாதர் போட்டோ அச்சிட்ட சம்பவம் பரபரப்பை தந்துள்ளது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவில், ரேஷன் கார்டில் இயேசு கிறிஸ்துவின் உருவம் அச்சிடப்பட்ட போட்டோ சோஷியல் மீடியாவில் வெளியாகி மிகுந்த சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

போன ஆகஸ்ட் மாதம், திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் அரசு பஸ்ஸில் வழங்கிய டிக்கெட்டில் "இயேசு தான் மெய்யான கடவுள்", "ஹஜ் மற்றும் ஜெருசலேமுக்கு புனித யாத்திரை வாருங்கள்" என்று விளம்பரம் அச்சடிக்கப்பட்டிருந்தது.

அப்போது இந்த விஷயம் சர்ச்சையானது.. வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு காரியம் என்று முதல்வர் ஜெகன் மோகன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

லெஸ்பியன் ஜோடியின் குழந்தை.. 34 வயதில் பிரதமராகும் பின்லாந்தின் மரீன்..அசர வைக்கும் அரசியல் டிவிஸ்ட்லெஸ்பியன் ஜோடியின் குழந்தை.. 34 வயதில் பிரதமராகும் பின்லாந்தின் மரீன்..அசர வைக்கும் அரசியல் டிவிஸ்ட்

வாசகங்கள்

வாசகங்கள்

அது மட்டுமல்ல.. திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் "இயேசுவே மெய்யான கடவுள்" போன்ற வாசகங்களும் திடீரென இணைக்கப்பட்டதாக கூறி ஒரு பரபரப்பு அப்போது ஏற்பட்டது. இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து

இம்மாநிலத்தில் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளில் இயேசு கிறிஸ்துவினுடைய படம் அச்சிடப்பட்டுள்ளது.. இந்த படம் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்தான், இயேசு கிறிஸ்து படம் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டுகளை வழங்கி உள்ளதாக தெரிகிறது.

அறிக்கை

அறிக்கை

இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஆந்திர அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.. இது தெலுங்கு தேசம் கட்சியினர் பரப்பி வரும் பிரச்சாரம் என்றும் குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெளிவுபடுத்தியும் உள்ளது.

தெலுங்கு தேசம்

தெலுங்கு தேசம்

"வத்லமாறு பகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஒருவர், குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை அச்சிட்டு அதை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். அந்த நபர் மதம் மாறிய கிறிஸ்தவர் அல்ல.. அவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஆவார்.

சாய்பாபா

சாய்பாபா

கடந்த 2016-ம் ஆண்டு இதே நபர் தான் குடும்ப அட்டைகளில் சாய்பாபாவின் உருவத்தையும், 2017-18 இல் விஷ்ணுவின் உருவத்தையும் அச்சிட்டுள்ளார். தற்போது இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.. இப்படி சர்ச்சை கிளப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
In Andhra Pradesh, Ration card bearing Jesus Christs photo sparks row and Action will be taken on this, said AP government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X