"குழந்தை என் ஜாடையில் இல்லையே".. ஏரிக்கரையில் பெற்ற தகப்பன் செய்த கொடூரம்.. சுற்றி வளைத்த போலீஸ்
ஹைதராபாத்: தன்னுடைய ஜாடையில் குழந்தை இல்லாததால், அதை ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்துள்ளார் பெற்ற தந்தை.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கல்யாண துர்க்கம் என்ற நகரை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா.. இவரது மனைவி சிட்டம்மா.. இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.
குழந்தை பிறந்ததில் இருந்தே, அது தன்னுடைய சாயலில் இல்லை என்று மல்லிகார்ஜுன சொல்லி வந்துள்ளார்.. அவருடன் சேர்ந்து அவர் குடும்பத்தினரும் இதே காரணத்தை சிட்டம்மாவின் சொல்லி, அவரது நடத்தையையும் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளனர்.
தாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 3 வயது குழந்தை.. ஃஸூம் மீட்டிங்கில் ஷாக் சம்பவம்.. என்ன நடந்தது?

தகராறு
இந்த நிலையில் நேற்று குழந்தையை அழைத்து கொண்டு தம்பதி இருவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.. அப்போது குழந்தை அழுதுள்ளது.. உடனே மல்லிகார்ஜூனா, குழந்தையை தான் தூக்கி வைத்து கொள்வதாகவும், கொஞ்ச நேரம் வெளியில் தூக்கி சென்றால், குழந்தை அழுகை நின்றுவிடும் என்று சொல்லி வாங்கியுள்ளார்.. நேராக ஏரிக்கரைக்கு சென்றிருக்கிறார்.

ஏரிக்கரை
அழுது கொண்டிருந்த குழந்தையின் வாயில் பிளாஸ்டரை ஒட்டிவிட்டார்.. இதனால் குழந்தை மூச்சுத்திணற ஆரம்பித்தது.. அதை அப்படியே வேடிக்கை பார்த்து கொண்டு நின்றார் மல்லிகார்ஜுனா.. சிறிது நேரத்தில் குழந்தை துடிதுடித்து இறந்துவிட்டது.. பிறகு, கையோடு எடுத்து சென்ற ஒரு பையில் குழந்தையை வைத்து ஏரியில் வீசி விட்டார்.. குழந்தையுடன் சென்ற கணவன் நீண்டநேரமாக வராமல் போகவும், அக்கம்பக்கமெல்லாம் சிட்டம்மா தேடினார்.. இருவருமே கிடைக்கவில்லை.

பதற்றம்
அதனால், பதற்றமடைந்த சிட்டம்மா இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.. தன் கணவன் மீது இது சம்பந்தமாக சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மல்லிகார்ஜுனவை வலைவீசி தேடி இறுதியில் அனந்தபூரில் சுற்றி வளைத்து கைது செய்து செய்தனர்.. அப்போது போலீசாரிடம் மல்லிகார்ஜுன வாக்குமூலம் தந்துள்ளார்.

வாக்குமூலம்
அதில், "என் மனைவியின் மீது எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.. நடத்தை மீது நிறைய சந்தேகம் உள்ளது.. அந்த குழந்தை என்னுடைய சாயலிலும் இல்லை.. என் குடும்பத்தை சார்ந்தவர்கள் சாயலிலும் இல்லை.. அதனால்தான் கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் தந்துள்ளார். இதையடுத்து, குழந்தையின் சடலத்தை ஏரிக்கரையில் தேடி கண்டெடுத்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.