ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அம்மாடியோவ்.. சந்திரபாபு நாயுடு மாஜி உதவியாளர் உள்ளிட்டோரிடம் ஐடி ரெய்டு.. 2,000 கோடி மோசடி அம்பலம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின், முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் சீனிவாசராவ் வீடுகள் மற்றும் பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை முடிவில் சுமார் 2,000 கோடி மதிப்புக்கு மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

சீனிவாசராவ், சந்திரபாபு நாயுடுவின் தனிப்பட்ட உதவியாளராக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான தற்போதைய அரசு அவரை மாநில திட்ட துறை உதவியாளர் ஆகியுள்ளது.

Incriminating evidence from Chandrababu Naidus ex- private secretary

இந்த நிலையில்தான் வருமானவரித் துறையினர் கடந்த 5 நாட்களாக சீனிவாசராவ் வீடுகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதுதவிர தெலுங்கு தேசம் கட்சியின் கடப்பா மாவட்ட தலைவர் சீனிவாச ரெட்டி என்பவர் வீட்டிலும், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

வருமான வரி சோதனைகள் முடிவடைந்த நிலையில், இன்று அது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், யாருடைய பெயரும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், மறைமுகமாக ரெய்டு தொடர்பான விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி-அமித் ஷா மட்டும் போதாது.. டெல்லி தோல்வி.. மேற்கு வங்க பாஜகவில் வெடித்த பூசல்மோடி-அமித் ஷா மட்டும் போதாது.. டெல்லி தோல்வி.. மேற்கு வங்க பாஜகவில் வெடித்த பூசல்

வருமானவரித் துறையின் செய்தித் தொடர்பாளர் சுரபி அலுவாலியா, கூறுகையில், ஹைதராபாத், விஜயவாடா, கடப்பா, விசாகப்பட்டினம், டெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற்ற சோதனையில் போலியான துணை காண்ட்ராக்டர்கள் மூலமாக பல கோடி ரூபாய் வரி நிதி மோசடி நடந்துள்ளது, போலியாக பில் தயார் செய்து மோசடி நடந்துள்ளது தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளன.

இ-மெயில்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் போன்றவையும் சோதித்து பார்க்கப்பட்டன. விளக்கம் அளிக்க முடியாத அளவிலான வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் போன்றவை தொடர்பாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

முக்கியமான ஒரு நபரின், முன்னாள் தனிப்பட்ட செயலாளர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. முதல் கட்ட சோதனையில் 2000 கோடிக்கும் மேலாக பண பரிவர்த்தனைகள், போலியான பில்கள் மூலமாக காட்டப்பட்டுள்ளன, போலியான நிறுவனங்கள் பல செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.

கணக்கு காட்ட முடியாது 85 லட்சம் ரொக்கப் பணம், மற்றும் 71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 25க்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Central Board of Direct Taxes on Thursday announced seizure of "incriminating evidence" from the residence and other premises of former Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu''s ex- private secretary Pendyala Srinivasa Rao.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X