வெந்து தணிந்தது காடு! வார்னருக்கு வணக்கத்தை போடு! ஹைதராபாத்தை துவம்சம் செய்த சேட்டன்! கலக்கல் மீம்ஸ்
ஹைதராபாத்: நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி படுதோல்வி அடைந்ததை பலரும் விமர்சனம் செய்து மீம் வெளியிட்டு வருகிறார்கள்.
நேற்று ஹைதராபாத் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனின் அதிரடியான 55 ரன்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.
அதன்பின் ஆடிய ஹைதராபாத் வெறும் 29 ரன்னிற்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி கடைசியில் 20 ஓவரில் 149-7 ரன்கள் மட்டுமே எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதை கலாய்த்து பலரும் மீம் வெளியிட்டு வருகிறார்கள்.
மோசமான தோல்வி
இதுவரை இந்த சீசனில் முக்கியமான அணிகள் என்று கருதப்பட்டவை எல்லாம் தோல்வி அடைந்துவிட்டன. ஹைதராபாத் அணி நேற்று ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அதேபோல் சிஎஸ்கே கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது. மும்பை அணி டெல்லியிடம் தோல்வி அடைந்தது. பெங்களூர் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பலர் கலாய்த்து வருகின்றனர்.

ஹைதராபாத் அணி
ஏலத்தின் போது ஹைதராபாத் அணி வார்னரை வெளியே விட்டது. அதேபோல் கேப்டன் மெட்டீரியலான ஹோல்டரை வெளியே விட்டது. மேலும் 14 கோடிக்கு கேன் வில்லியம்சனை தக்க வைத்தது என்று கடுமையான பல முடிவுகளை எடுத்தது. ஒரு டீமை எப்படி காலி பண்ணனும்னு சொல்லி தரேன் என்று இதை வைத்து பலர் மீம் போட்டு வருகிறார்கள்.

வாஷிங்க்டன் சுந்தர்
நேற்று போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பவுலிங் மோசமாக இருந்தது. பேட்டிங்கில் 14 பந்தில் 40 ரன்கள் எடுத்த சுந்தர் நேற்று 3 ஓவரில் 47 ரன்கள் எடுத்தார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல் நடராஜன் இரண்டு விக்கெட் எடுத்தாலும் 4 ஓவரில் 43 ரன்கள் கொடுத்தது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

ஹைதராபாத்
ஹைதராபாத் அணியில் கடந்த சீசன்களில் வார்னர், பிரைஸ்டோ, ரஷீத் கான் போன்ற சிறப்பான வீரர்கள் இருந்தனர். இதில் வார்னரை அணி நிர்வாகம் மோதலால் நீக்கியது. இந்த நிலையில் வார்னர், பிரைஸ்டோ இல்லாமல் தற்போது ஹைதராபாத் அணி சொதப்பி வருகிறது. இதை வைத்து பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். முக்கியமாக கூல் சுரேஷின் வசனத்தை வைத்து, வெந்து தணிந்தது காடு வார்னருக்கு வணக்கத்தை போடு என்று மீம் போட்டு கிண்டல் செய்து வருகின்றன. அதிலும் சேட்டன் சஞ்சு போல ஹைதராபாத் கேப்டன் ஆடவில்லை என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் அணி
இந்த தொடரில் ராஜஸ்தான் அணி சிறப்பாக காணப்படுகிறது. ஏற்கனவே அந்த அணியின் பவுலிங் நன்றாக உள்ளது. போல்ட், குல்டர் நைல், அஸ்வின், சாஹல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா என்று அந்த அணியின் பவுலிங் மிக சிறப்பாக இருக்கிறது. இதனால் அங்கு அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து மும்பை பேன்ஸ் பலர்.. ஐஐயோ அடுத்த மேட்ச் நமக்கு ராஜஸ்தான் கூடவா என்று பயந்து போய் மீம் போட்டுள்ளனர்.

நோ பால்
நேற்று போட்டியில் ஹைதராபாத் அணி நிறைய நோ பால்களை வீசியது. முக்கியமாக ஆரம்பத்திலேயே அவுட்டாக வேண்டிய பட்லர் நோ பால் காரணமாக தப்பித்தார். நேற்று 4 நோ பால், 6 வைட் என்று 14 ரன்களை ஹைதராபாத் அணி கூடுதலாக கொடுத்தது. இதை விமர்சனம் செய்து பலரும் மீம் போட்டுள்ளனர்.