இவ்வளவு கோடியா! அடையாளம் தந்த இர்பான் பதான்.. ஐபிஎல் உலகில் 2 இளம் காஷ்மீர் வீரர்கள் செய்த சாதனை!
ஹைதராபாத்; இர்பான் பதான் கண்டுபிடித்த இரண்டு ஜம்மு காஷ்மீர் வீரர்கள் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் ரிட்டென்ஷனில் மிக முக்கியமான வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த வருட இறுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ரிட்டென்ஷன் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இந்த ரிட்டென்ஷனில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இளம் வீரர்களை ஹைதராபாத் அணி ரீடெயின் செய்துள்ளது. டேவிட் வார்னர் உடன் இருந்த மோதல் காரணமாக அவர் ரீடெயின் செய்யப்படவில்லை.
அதேபோல் ரஷீத் கான் ரீடெயின் செய்யப்படவில்லை. இவர் முதல் ஆப்ஷனாக தன்னை ரீடெயின் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
2 டோஸ் போட்டதோடு.. இனி பூஸ்டரும் போட வேண்டுமா? சீரம் நிறுவனம் முடிவு.. யாருக்கெல்லாம் தேவை?

16 கோடி ரூபாய்
அதாவது 16 கோடி ரூபாய்க்கு தன்னை ரீடெயின் செய்ய வேண்டும் என்று ரஷீத் கேட்டதாக தகவல்கள் வந்தன. இதன் காரணமாக ரஷீத் கானை ஹைதராபாத் அணி ரீடெயின் செய்யவில்லை. இதையடுத்து கேன் வில்லியம்சன் முதல் வீரராக 14 கோடி ரூபாய்க்கு ரீடெயின் செய்யப்பட்டார். அதேபோல் அப்துல் சமாத் 4 கோடி ரூபாய்க்கும், உம்ரான் மாலிக் 4 கோடி ரூபாய்க்கும் எடுக்கப்பட்டனர்.

காஷ்மீர்
காஷ்மீரை சேர்ந்த திறமையான இரண்டு இளம் வீரர்களை ஹைதராபாத் அணி எடுத்து அசத்தி உள்ளது. இருவருக்கும் தலா 4 கோடி ரூபாய் கொடுத்து அந்த அணி ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரின் இந்த சாதனைக்கு பின் இர்பான் பதான் முக்கியமான நபராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இர்பான் பதான்தான் உம்ரான் மாலிக் என்ற ஜம்மு காஷ்மீர் வீரரை அடையாளம் கண்டு ஹைதராபாத் அணிக்கு பரிந்துரை செய்தார்.

பவுலிங்
கடந்த சீசனுக்கு முன்பாகவே உம்ரான் மாலிக் பவுலிங்கை பார்த்து இர்பான் பதான்தான் பரிந்துரையை செய்தார். இவரை எடுங்கள் என்று ஹைதராபாத் அணிக்கு ஆலோசனை சொன்னார். கடந்த சீசனில் ஹைதராபாத் அணியில் ஆடிய உம்ரான் அசால்ட்டாக 153 கிமீ வேகத்தில் பந்து வீசினார். 21 வயதே ஆன இவர் சர்வதேச அளவில் வலுவான வெளிநாட்டு வீரர்களை தனது வேகப்பந்து மூலம் திணற வைத்தார்.

இர்பான்
இவரை அடையாளம் கண்டது இர்பான் பதான்தான். இவருக்கு தனிப்பட்ட பயிற்சியையும் இர்பான் பதான் வழங்கினார். அதேபோல் அப்துல் சமாத் என்ற இளம் வீரரை அடையாளம் கண்டதும் பதான்தான். ஐபிஎல்லில் மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்கு சமாத்தை இவர் பரிந்துரை செய்தார்.

அடையாளம்
கடைசியில் பதான் பரிந்துரையால் சமாத் ஹைதராபாத் அணியில் வாய்ப்பு பெற்றார். இப்போது இவர்கள் இருவரும் அந்த அணியில் ரீடெயின் செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் புதிய வாழ்க்கையை இர்பான்தான் தேடிக்கொடுத்துள்ளார். அதிலும் ஒரு அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே ரீடெயின் செய்யும் அளவிற்கு திறமையான வீரர்களை பதான் கண்டுபிடித்துக்கொடுத்துள்ளார்.

பதான் சாதனை
காஷ்மீரில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு களம் அமைக்க வேண்டும் என்று இர்பான் பதான் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில்தான் இரண்டு வீரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை அவர் ஏற்படுத்தி உள்ளார்.