ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியின் பதவியேற்பு விழாவை கோட்டைவிட்ட ஜெகன், சந்திரசேகர்ராவ்.. காரணம் தெரிஞ்சா நொந்துடுவிங்க!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு செல்ல திட்டமிருந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் கடைசி நேர தாமதத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது.

ஆந்திர முதல்வராக ஒய்எஸ்ஆர்சி கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று பதவியேற்றார். இதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு அம்மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நேற்று ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமே முதல்வராக பதவியேற்றார்.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு சட்டம் மற்றும் நீதித்துறை உட்பட 3 முக்கிய துறைகள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு சட்டம் மற்றும் நீதித்துறை உட்பட 3 முக்கிய துறைகள் ஒதுக்கீடு

பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு

பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு

அவரது அமைச்சரவை வரும் ஜூன் 6ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

டெல்லி செல்ல திட்டம்

டெல்லி செல்ல திட்டம்

அழைப்பை ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி, மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்தார். நேற்று பகல் 2 மணிக்கு பிறகு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் திட்டமிட்டிருந்தனர்.

அமைச்சர்கள் பதவியேற்கவில்லை

அமைச்சர்கள் பதவியேற்கவில்லை

அமைச்சர்கள் பதவியேற்றால குறித்த நேரத்திற்கு டெல்லி செல்ல முடியாது என நேற்று அவர் மட்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டு அமைச்சர்கள் பதவியேற்பை 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார். ஆனால் பதவியேற்புக்கு பின் ஜெகன் மோகன் ரெட்டி, பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார்.

விருந்தை முடித்துவிட்டு

விருந்தை முடித்துவிட்டு

விருந்து முடிய 2.30 மணியாகிவிட்டது. விருந்தை முடித்து விட்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட தயாராயினர் ஜெகன் மோகன் ரெட்டியும், சந்திரசேகர் ராவும்.

தரையிறங்க தடை

தரையிறங்க தடை

ஆனால் நேரம் கடந்து விட்டது தனி விமானம் இனி புறப்பட்டு டெல்லி வர முடியாது என தகவல் வந்தது. பதவியேற்பு விழாவை முன்னிட்டு தனி விமானம் தரையிறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

பங்கேற்க முடியாமல்போனது

பங்கேற்க முடியாமல்போனது

இதைத்தொடர்ந்து சரக்கு விமானம் மூலம் டெல்லி செல்லலாம் என இரண்டு முதல்வர்களும் திட்டமிட்டனர். ஆனால் அதிக நேரமானதால் சரியான நேரத்திற்கு பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு செல்ல முடியாது என அதிகாரிகள் கைவிரித்ததாக தெரிகிறது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சந்திரசேகர் ராவின் பிரதமர் பதவியேற்பில் பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்தானது.

ரொம்பவே மூடு அவுட்

ரொம்பவே மூடு அவுட்

உலகத்தலைவர்கள் பங்கேற்ற பதவியேற்பு நிகழ்ச்சி, பல மாநில தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் கோட்டை விட்டதை எண்ணி ரொம்பவே மூடு அவுட் ஆனார்களாம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவும்..!

English summary
Andhra CM Jagan Mohan Reddy and Telangana CM Chandrasekar rao missed the PM swearing in ceremony due to feast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X