ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவர்தான் இனி மாநில தலைவர்களில் ஹீரோ.. ஜெகன் நிகழ்த்திய இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது!

ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிபெறுவதற்கு பின் பல முக்கிய காரணங்கள் இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Jagan Mohan Reddy | ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ

    ஹைதரபாத்: ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிபெறுவதற்கு பின் பல முக்கிய காரணங்கள் இருக்கிறது. அவரின் புதிய வாக்கு வங்கியை பார்த்தால் இந்திய அரசியலில் புதிய மாநில ஹீரோ உருவாகிவிட்டார் என்று நீங்களே சொல்வீர்கள்!

    பொதுவாக ஆந்திர பிரதேச அரசியலில் ஜாதி வாக்குகள் அதிக முக்கியத்துவம் பெறும். தென்மாநிலங்களில் மற்ற இடங்களில் ஜாதி அரசியல் இருந்தாலும், ஆந்திர பிரதேசத்தில் வெட்ட வெளிச்சமாக அது தெரியும்.

    ஆனால் அந்த ஜாதி அரசியலையும் கடந்து ஜெகன் மோகன் ரெட்டி இந்த தேர்தலில் சாதித்து இருக்கிறார். இதெல்லாம் நடக்க கூடிய விஷயமா என்று எல்லோரும் நினைத்த விஷயங்களை அவர் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்.

    ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது கடும் அப்செட்.. போன் அழைப்புகளுக்கு கூட பதில் சொல்லாத ராகுல் காந்தி ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது கடும் அப்செட்.. போன் அழைப்புகளுக்கு கூட பதில் சொல்லாத ராகுல் காந்தி

    வெற்றி என்ன

    வெற்றி என்ன

    ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 175 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இந்நிலையில் அங்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 22 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை இழந்துள்ளது. அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வென்றுள்ளது. அங்கு மெஜாரிட்டி பெற 88 இடங்களில் வெல்ல வேண்டும். இதனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராகிறார்.

    வாக்குகள் எப்படி

    வாக்குகள் எப்படி

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பக்கா ரெட்டி அரசியலை வைத்து வளர்ந்த கட்சி என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருக்கிறது. இதனால் இந்த தேர்தலில் ரெட்டிகளின் வாக்குகளையும் மற்ற சில உயர் சாதியினரின் வாக்குகளையும் மையமாக வைத்து அக்கட்சி போட்டியிடும். வெற்றிபெறும், ஆனாலும் பெரிய சாதனை எல்லாம் செய்யாது என்றே கணித்து இருந்தனர்.

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    ஆனால் நடந்தது அப்படி இல்லை. ஆந்திர பிரதேசத்தில் கிட்டத்தட்ட 90% ஜாதிகள் அனைத்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரெட்டியை சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல் வேறு ஜாதியை சேர்ந்த மக்களும் வாக்குகளை வாரி இறைத்து இருக்கிறார்கள்.

    புள்ளி விவரம்

    புள்ளி விவரம்

    பின் வரும் வாக்குகள் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஜாதி ரீதியாக பெற்ற வாக்குகள் ஆகும்.

    உயர் ஜாதியினர் - 29% வாக்குகள்.

    ரெட்டி - 86% வாக்குகள்.

    கம்மா -34% வாக்குகள்.

    காபு - 19% வாக்குகள்.

    ஓபிசி - 41% வாக்குகள்.

    எஸ்சி -64% வாக்குகள்.

    எஸ்டி -86% வாக்குகள்.

    முஸ்லீம் -49% வாக்குகள்.

    மற்றவர்கள் -24 % வாக்குகள்.

    மாற்றம்
    தெலுங்கு தேசம்

    பின் வரும் வாக்குகள் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஜாதி ரீதியாக பெற்ற வாக்குகள் ஆகும்.

    உயர் ஜாதியினர் - 57% வாக்குகள்.

    ரெட்டி - 8% வாக்குகள்.

    கம்மா -61% வாக்குகள்.

    காபு - 47% வாக்குகள்.

    ஓபிசி - 46% வாக்குகள்.

    எஸ்சி -31% வாக்குகள்.

    எஸ்டி -14% வாக்குகள்.

    முஸ்லீம் -46% வாக்குகள்.

    மற்றவர்கள் -54 % வாக்குகள்.

    இதுதான்

    இதுதான்

    இந்த வாக்கு சதவிகிதம் மூலம் ஜாதி வாக்குக அரசியலை ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி உடைத்து இருக்கிறார் என்றுதான் கூறி வேண்டும் . எஸ்சி, எஸ்டி மக்கள் ஜாதியை தாண்டி அதிகமாக ஜெகனுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல் சந்திரபாபுவிற்கு வாக்களிக்கும் கம்மா ஜாதி மக்களும் அதிகமாக இந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

    ஹீரோவாகிறார்

    ஹீரோவாகிறார்

    அதேபோல் விவசாயிகள், இளைஞர்களும் அதிகமாக ஜெகன் மோகன் ரெட்டிக்குத்தான் வாக்களித்து இருக்கிறார்கள். ஜெகன் நிகழ்த்திய இந்த சாதனையை அம்மாநிலத்தில் இனி யாரும் செய்ய முடியாது என்கிறார்கள். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்குமான தலைவராக ஜெகன் மாறி உள்ளார் என்று உறுதியாக கூற முடியும்.. இதற்கு முன் ஆந்திர அரசியலில் இப்படி அனைத்து தரப்பு மக்களுக்குமான தலைவர் ஒருவர் இருந்தார்.. அவர் வேறு யாருமில்லை ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டி!

    English summary
    YS Jagan Mohan Reddy did an unimaginable change in Andhra Politics against Naidu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X