ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன்.. வீட்டில் ஜன்னல்.. கதவு அமைக்க ரூ.73 லட்சம் ஒதுக்கீடு!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த வீட்டிற்கு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை அமைக்க ரூ. 73 லட்சம் அரசு பணத்தை அம்மாநில அரசு கடந்த மாதம் ஒதுக்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் எதிரியுமான சந்திரபாபு நாயுடு முதல்வரின் வீடு மற்றும் அலுலவகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒய்எஸ்ஆர் ஜெகனின் அரசு, வீட்டில் கதவு மற்றும் ஜன்னல் அமைக்க 73லட்சம் செலவு அரசு பணத்தை ஒதுக்கப்பட்டுள்ளது ஆந்திர மாநிலம் நிதி சிக்கலில் இருக்கும் போது கடந்த ஐந்து மாத ஜெகனின் ஆட்சியில் இப்படி ஒரு செலவு " என் தனது டுவிட்டர் பதவில் விமர்சித்துள்ளார்.

மின்சார பணிக்கு 3.8 கோடி

மின்சார பணிக்கு 3.8 கோடி

கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு குண்டுர் மாவட்டத்ல் உள்ள தாடேப்பள்ளி சொந்த கிராமம் ஆகும். அங்கு சுமார் 5 கோடி ரூபாய் செலவில் சாலை போட நடவடிக்கை எடுத்தார். தொடர்நது தனது வீட்டின் மின்சார பணிக்காக 3.6 கோடி செலவு செய்தார். மேலும் தனது ஊரில் ஒரு ஹெலிபேட் தளத்தை சுமார் 1.89 கோடி செலவில் அமைத்தார்.

மின்சார பணிக்கு 3.8 கோடி

மின்சார பணிக்கு 3.8 கோடி

கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு குண்டுர் மாவட்டத்ல் உள்ள தாடேப்பள்ளி சொந்த கிராமம் ஆகும். அங்கு சுமார் 5 கோடி ரூபாய் செலவில் சாலை போட நடவடிக்கை எடுத்தார். தொடர்நது தனது வீட்டின் மின்சார பணிக்காக 3.6 கோடி செலவு செய்தார். மேலும் தனது ஊரில் ஒரு ஹெலிபேட் தளத்தை சுமார் 1.89 கோடி செலவில் அமைத்தார்.

நாயுடு கட்டிடம் இடிப்பு

நாயுடு கட்டிடம் இடிப்பு

அதேபோல முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது வீட்டுக்கு அருகில், ‘பிரஜா தர்பார்' என்னும் பொது மக்கள் சந்திப்பதற்கான இடத்தையும் 82 லட்ச ரூபாயில் கட்டினார். ஆனால், அதேநேரம் கடந்த ஜூன் மாதம் சந்திரபாபு நாயுடு, முதல்வராக இருந்தபோது அவரது வீட்டின் அருகே கட்டிய 8 கோடி ரூபாய் கான்ஃபெரன்ஸ் அறையை ‘சட்டவிரோதமாக' கட்டப்பட்டுள்ளதாக கூறி இடித்து தள்ளினார்.

வண்ணம் பூசினார்

இப்படி பல்வேறு சர்ச்சைகள் ஜெகன் மோகன் ரெட்டியை தற்போது சூழ்ந்துள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் இருந்த திட்டம் ஒன்றுக்குத் தனது தந்தையின் பெயரைச் சூட்ட முயன்றார். பின்னர் கடும் எதிர்ப்பு வந்ததால் கைவிட்டார். தேசிய கொடி வரையப்பட்டு இருந்த ஊராட்சி மன்ற கட்டடத்திற்கு கட்சி கொடியின் வண்ணத்தை பூசி கடும் எதிர்ப்பை சந்தித்தார்.

38 கோடி வீடு

38 கோடி வீடு

இது ஒருபுறம் எனில் அண்டை மாநிலமான தெலங்கானாவின் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், கடந்த 2016 ஆம் ஆண்டு, 38 கோடி ரூபாய் செலவில் முதல்வர் இல்லத்தைக் கட்டினார்.

English summary
chandrababu naidu said jegan Govt allotted a whopping Rs. 73 LAKHS to fix WINDOWS for his house: Now that’s one super expensive view at the expense of State excheque
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X