ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ஜெகன் அனே நேணு'... 'சிஎம்' ஆக 'கிங்மேக்கராக' மாறப்போகும் ஜெகன் ஆதரவு.. மோடிக்கா.. லேடிக்கா

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: நடிகர் மகேஷ் பாபுவின் பரத் அனே நேணு தெலுங்கு படம் பாணியில் சிஎம் ஆக இருந்த அவரது அப்பா ராஜசேகர் ரெட்டி மறைந்த பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு இப்போது ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி அவதாரம் எடுக்கப்போகிறார் என கணிப்புகள் சொல்கின்றன. இந்நிலையில் அவரது ஆதரவு மோடிக்கா அல்லது சோனியாவுக்கா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

அவர்கள் நம்பிக்கைக்கு சாதமாகும் வகையிலேயே கருத்துக்கணிப்பு வந்துள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியே ஆந்திராவின் முதல்வராக வருவார் என தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் சொல்லியிருக்கின்றன.

இதேபோல் ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 18 முதல் 20 தொகுதிகளை ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.இதனால் ஐக்கியமுற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரின் முழு கவனமும் இப்போது ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவை பெறுவதில் தான் உள்ளது.

மாயாவதியை கொஞ்சம் பார்க்கணும்.. வரிசையில் காத்திருக்கும் உயர் அதிகாரிகள்.. அதிரடி திருப்பம்! மாயாவதியை கொஞ்சம் பார்க்கணும்.. வரிசையில் காத்திருக்கும் உயர் அதிகாரிகள்.. அதிரடி திருப்பம்!

சோனியா முயற்சி

சோனியா முயற்சி

ஜெகனின் ஆதரவை பெறுவதோடு தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவையும் பெற்றால் 25 தொகுதிகள் அப்படியே காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என சோனியா காந்தி நம்புகிறார். சரத்பவாரிடம் ஜெகனிடம் பேசுமாறு சோனியா பொறுப்பை ஒப்படைத்துள்ளார். சரத்பவாரும், ஜெகனும் 24ம் தேதி சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அமித்ஷா முயற்சி

அமித்ஷா முயற்சி

இதற்கிடையே மெஜாரிட்டி கிடைக்காமல் போகும் சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்து வரும் பாஜக, இந்த பக்கம் சந்திரபாபு நாயுடு, மோடியை எதிர்த்து வெளியேறியவுடன் மறைமுகமாக ஜெகனுடன் துண்டுபோட்டு ஒட்டிக்கொண்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் ஜெகனின் ஆதரவை பெறுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அமித்ஷா.

சந்திரசேகர் ராவ் ஆதரவு

சந்திரசேகர் ராவ் ஆதரவு

இதற்கிடையே தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவை வளைப்பதிலும் பாஜக, காங்கிரஸ் போராடி வருகிறார்கள். இந்த இரண்டு பேரின் ஆதரவை பெற்றால் (ஒருங்கிணைந்த ஆந்திராவில் 42 தொகுதி உள்ளது) நிச்சயம் முழு மெஜாரிட்டியை பெறுவது எளிது என இருகட்சிகளும் ஆர்வமாக உள்ளன.

ஜெகன் விரும்பமாட்டார்

ஜெகன் விரும்பமாட்டார்

இந்நிலையில் ஜெகன் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக முடிவு எடுப்பது கடினம் என்றே சொல்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் ஒரே அணியில் இருந்தால் ஆந்திராவில் சிக்கல் வரும் என்பதால் அப்படி ஒரு முடிவு எடுக்க ஜெகன் நிச்சயம் விரும்பமாட்டார் என்கிறார்கள் அங்கிருப்பர்கள். எனவே ஜெகன் மோடிக்கு ஆதரவாக முடிவு எடுக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

பாஜகவுக்கு ராவ் சப்போர்ட்

பாஜகவுக்கு ராவ் சப்போர்ட்

இதேபோல் தான் சந்திரசேகர் ராவ் நிலையும் உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் தான் எதிர்க்கட்சி என அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் மக்கள் மதிக்கமாட்டார்கள் என்ற பயத்தில் சந்திரசேகர் ராவ் உள்ளார். இதனால் மோடிக்கே இவரும் ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மோடியின் பாஜக அதிக தொகுதிகளில் வென்றால் நிச்சயம் ஜெகன், சந்திரசேகர்ராவ் இருவரும் தோல் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
YSR congress leader jegan mohan reddy may give support to pm modi on chandrababu naidu support to congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X