ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிதி விஷயத்தில் மாநில அரசுகளை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது.. கேசிஆர் ஆவேசம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனா பாதிப்பால் மாநில அரசுகள் நிதிதட்டுப்பாட்டில் இருப்பதால் மக்களுக்கு உதவுவதற்காக மாநிலங்களுக்கு நிதி தேவைப்படுகிறது.
அதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கும்போது, மாநிலங்களை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

    Corona crises says Vijayabaskar | If you go outside, wash your hands with soap

    கொரோனா வைரஸ் தொற்றால் மாநிலங்கள் கடுமையான நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. ஒவ்வொரு மாநில அரசும் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசு குறிப்பிட்ட அளவு நிதிதான் ஒதுக்கி வருகிறது.

    இதற்கு பல்வேறு மாநில அரசுகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்த போது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    அப்போது அவர் கூறுகையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பொருளாதார சிறப்பு திட்டங்கள், வெறும் ஏமாற்றுவேலை என்றும் துரோகம் மற்றும் சர்வாதிகார மனப்பான்மை. என்றும் அது ஒரு குரூரமான திட்டம் என்றும் நாங்கள் கேட்டது இது அல்ல என்றும் கடும் கோபமாக தெரிவித்தார்.

    இழுத்து பிடித்து முத்தம்.. கேமரா இருந்தும் அக்கப்போரா.. குவியும் கண்டனம்.. சஸ்பெண்ட்டுக்கு பாராட்டுஇழுத்து பிடித்து முத்தம்.. கேமரா இருந்தும் அக்கப்போரா.. குவியும் கண்டனம்.. சஸ்பெண்ட்டுக்கு பாராட்டு

    கேசிஆர் கண்டனம்

    கேசிஆர் கண்டனம்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நோக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதா? அல்லது 20 லட்சம் கோடி என்ற எண்ணிக்கைக்கு கணக்கு காட்டுவதா? என்று சர்வதேச பத்திரிகைகளே விமர்சித்துள்ளதாகவும் இந்த திட்டத்தை தாங்கள் கண்டிப்பதாகவும் கேசிஆர் விமர்சித்துள்ளார்.

    கேலிக்குரிய நிபந்தனைகள்

    கேலிக்குரிய நிபந்தனைகள்

    கேசிஆர் மேலும் கூறுகையில். கொரோனா பாதிப்பால் மாநில அரசுகள் நிதிதட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, மக்களுக்கு உதவுவதற்காக மாநிலங்களுக்கு நிதி தேவையாகும். அதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கும்போது, மாநிலங்களை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது. சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும் முறையா இது? நிதி பொறுப்புடைமை மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின்கீழ் தெலுங்கானாவுக்கு 2 சதவீத உயர்வு (ரூ.20 ஆயிரம் கோடி) மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் கேலிக்குரியது. கேவலமாகவும் இருக்கிறது.

    கூட்டாட்சி கொள்கையா இது

    கூட்டாட்சி கொள்கையா இது

    மின்துறை சீர்திருத்தங்களை அமல்படுத்தினால், ரூ.2 ஆயிரத்து 500 கோடி தருவதாக சொல்கிறார்கள். சந்தை குழுக்களில் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டால், மேலும் ரூ.2 ஆயிரத்து 500 கோடி அளிப்பதாக சொல்கிறார்கள். இதுவா நிதி பேக்கேஜ்? இதை நிதி பேக்கேஜ் என்றே சொல்ல முடியாது. கூட்டாட்சி முறையில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையா இது?

    மத்திய அரசு கவுரவம்

    மத்திய அரசு கவுரவம்

    மாநிலங்கள் எதற்கு இருக்கின்றன? மாநில அரசுகளும் அரசியல் சட்டப்படி செயல்படுபவை. மத்திய அரசுக்கு கீழ் இருப்பவை அல்ல. மாநிலங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அணுகுமுறை, கூட்டாட்சி உணர்வுகளுக்கு எதிராக உள்ளது. பிரதமர் மோடி, ஒத்துழைப்பான கூட்டாட்சி பற்றி பேசுகிறார். ஆனால், அது முற்றிலும் வெற்று முழக்கம் என்று நிரூபணமாகி விட்டது. மத்திய அரசு தனது கவுரவத்தை, தானே குறைத்துக்கொண்டுள்ளது" இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

    English summary
    Telangana chief minister K Chandrasekhar Rao on Monday criticised the Centre of treating the states as “beggars”
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X