ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விசாகப்பட்டின விஷவாயு கசிவு.. தென்கொரிய நிறுவனம் கொடுத்த "அந்த" விளக்கம்.. கொதித்தெழுந்த மக்கள்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து அந்த நிறுவனம் அளித்த விளக்கம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

ஹைதபராபாத்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து அந்த நிறுவனம் அளித்த விளக்கம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Vishakhapatnam gas leak| 3 நாட்களுக்கு பின் வந்த ரிப்போர்ட்

    ஆந்திர பிரதேசத்தில் நடந்த விஷவாயு விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் மூன்று நாட்களுக்கு முன் விஷவாயு விபத்து ஏற்பட்டது.

    அங்கு ஆர்ஆர் வேங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விஷவாயு கசிவு காரணமாக 11 பேர் பலியாகி உள்ளனர்.

    தமிழக பொருளாதாரத்தை மீட்க அதிரடி திட்டம்.. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு!தமிழக பொருளாதாரத்தை மீட்க அதிரடி திட்டம்.. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு!

    விளக்கம் அளித்தது

    விளக்கம் அளித்தது

    இந்த நிலையில் தற்போது இந்த விபத்துக்கு தற்போது தற்போது எல்ஜி பாலிமர் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி கெம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த விபத்து நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். இந்த விபத்துக்கு நாங்கள் இரங்கல் தெரிவித்து கொளிறோம். இந்த விபத்து என்ன காரணம் என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம். இது போல இனி நடக்காது.

    உறுதி செய்வோம்

    உறுதி செய்வோம்

    வரும் நாட்களில் இனி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணிகளை செய்வோம். தற்போது அந்த தொழிற்சாலையில் பாதுகாப்பு சரி செய்யப்பட்டுள்ளது. அங்கு சூழ்நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய எங்களால் முயன்றதை செய்து வருகிறோம்.

    உதவி செய்வோம்

    உதவி செய்வோம்

    இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.அரசுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம், என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த விளக்கத்தில் விபத்துக்கு காரணம் என்ன என்று அந்த நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை. அதேபோல் இந்த விபத்தில் பலியான ஊழியர்களுக்கு கூட நிவாரணம் அளிக்கப்படவில்லை. வெறும் sorry மட்டுமே அந்த நிறுவனம் கேட்டுள்ளது.

    பாதுகாப்பு எப்படி உள்ளது

    பாதுகாப்பு எப்படி உள்ளது

    மேலும் அந்த தொழிற்சாலையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் அந்த நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை. அந்த இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக ஏற்கனவே அப்பகுதி மக்கள் புகார் அளித்து இருந்தனர். பல வருடங்களாக அந்த ஆலையை மூட வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்தனர். பல வருடங்களாக அப்பகுதி மக்கள் இது தொடர்பாக போராடி வந்தனர்.

    மக்கள் கோபம்

    மக்கள் கோபம்

    இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் விளக்கம் மக்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதையடுத்து மக்கள் இன்று அந்த பகுதியில் போராட்டம் செய்தனர். இன்று காலையில் இருந்து அந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உடனடியாக ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். ஆலையை மூடும் வரையில், போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அப்பகுதி கூறியுள்ளனர்.

    English summary
    LG Polymers industry reaction to Vishakhapatnam gas leak make people angry on the company.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X