ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பாவின் மரணத்தில் தொடங்கிய பயணம்.. விழுந்த இடத்தில் எழுந்த ஜெகன் மோகன்.. ஆந்திர மகுடம் சூடினார்!

ஆந்திர பிரதேசத்தின் புதிய முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்க இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results 2019 : ஆந்திரா: 2 தேர்தல்களிலுமே ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை- வீடியோ

    ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தின் புதிய முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்க இருக்கிறார். அங்கு உள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கு தேசம் 23 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

    அப்பாவின் மரணம் பல கலவரங்களை ஏற்படுத்திவிட்டது.. ஆனால் அவரின் தொண்டர்கள் எங்கள் பக்கம் வருவார்கள், என் அப்பாவிற்கு விசுவாசமான தொண்டர்கள் அவரின் இறப்பிற்கு பின்பும் அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள்.. நாங்கள் திரும்பி வருவோம்.. இது காங்கிரஸ் காட்சியை விட்டு நீங்கிய போது ஜெகன்மோகன் ரெட்டி கூறியது.

    இப்போது அந்த சொல்படியே ஜெகன்மோகன் ரெட்டி திரும்பி வந்து இருக்கிறார். எங்கு விழுந்தாரா அங்குதான் தன் தடம் அழுத்தமாக படிய எழுந்து நின்று இருக்கிறார்.

    செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்! செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!

    அப்பாவின் மரணம்

    அப்பாவின் மரணம்

    2009ல் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி பெரிய தொண்டர் படையுடன், ஆதரவுடன் நிலையான ஆட்சி நடத்தி வந்தார். ஆனால் அவரின் வாழ்க்கை விபத்து மூலம் முடிவிற்கு வந்தது. ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின், காங்கிரஸ் கட்சியில் பெரிய பிளவு ஏற்பட்டது. காங்கிரசில் அதிரடியாக நிறைய மாற்றம் ஏற்பட்டது.

    கலகம்

    கலகம்

    காங்கிரசில் ராஜசேகரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிளவு ஏற்பட தொடங்கியது. அப்பாவின் நினைவாக ஜெகன்மோகன் ரெட்டி பேரணி நடத்த திட்டமிட்டார். இதில் கொஞ்சம் அரசியல் லாபம் அடையவும் அவர் ஆசைப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். அப்பாவின் காலியான இருக்கைக்கு அப்போதே ஜெகன் குறி வைத்து இருந்தார்.

    அதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக அதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக

    அனுமதி இல்லை

    அனுமதி இல்லை

    ஆனால் காங்கிரஸ் அதை எல்லாம் அனுமதிக்கவில்லை. அவர் நடத்திய பேரணிக்கு காங்கிரஸ் கடுமையான கண்டங்களை தெரிவித்தது. முதலில் இதற்கு தடை விதிக்க ஆசைப்பட்டு பின் அனுமதி அளித்தது. அதே சமயம் ஆந்திராவில் தெலுங்கானா போராட்டமும் பெரிய அளவில் நீடித்து வந்தது. இந்த பேரணி, தெலுங்கானா பிரச்சனையை பெரிதாகியது.

    நேரடி விமர்சனம்

    நேரடி விமர்சனம்

    இதனால் காங்கிரஸ் கட்சி தனது சொந்த எம்பியான ஜெகன்மோகன் ரெட்டியை நேரடியாக விமர்சனம் செய்தது. இந்த நிலையில்தான் 2010ல் ஆந்திரா பிரிவிற்கு காங்கிரஸ் தலையாட்டியது. தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. காங்கிரஸ் இதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த கோபத்தில்தான் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்தார்.

    போனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே! போனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே!

    பிரிந்து சென்றார்

    பிரிந்து சென்றார்

    என் அப்பாவின் தியாகத்தை அவமதித்தனர், தெலுங்கானாவை பிரித்து ஆந்திராவை கூறு போட்டார்கள்.. இதுதான் ஜெகன்மோகன் ரெட்டி தனது சகோதரி மற்றும் தொண்டர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் போது கூறியது. இதனால் 2009ல் இருந்து இயங்கி கொண்டு இருந்த சிறிய கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் 2010ல் சேர்ந்து தலைவரானார். இது ஒய்.எஸ்.ஆர் ரசிகர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்தது.

    நிறைய போராட்டம்

    நிறைய போராட்டம்

    அதன்பின்பான ஜெகனின் அரசியல் பயணம் நிறைய போராட்டம், ரத்தம் படிந்த பேரணி, நிறைய கலவரம், கிரிமினல் வழக்குகள் என்று நீண்டது. பார்க்க சாதுவாக இருக்கும் ஜெகன் மீது மிக மிக கடுமையாக புகார்கள், வழக்குகள் எல்லாம் போடப்பட்டது. ஆனால் அனைத்தையும் தன்னுடைய அரசியல் மைலேஜுக்கு டீசலாக பயன்படுத்திக் கொண்டார்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இந்த நிலையில்தான் தற்போது தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், தெலுங்கு தேசம் என்ற வரிசையாக அனைத்து கட்சிகளையும் ஜெகன் மோசமாக விமர்சனம் செய்து வந்தார். முக்கியமாக சந்திரபாபு நாயுடு மீது நிலவும் விமர்சனங்களை எல்லா கட்சி மீது பரவ விட்டு, தன்னை புனிதராக காட்டினார். இதில் அவருக்கு ஜாதி அரசியலும் கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்றார்

    வெற்றி பெற்றார்

    தன் மீது பல வழக்குகள், புகார்கள் நிலுவையில் இருக்கும் நிலையில் தனிப்பெரும்பான்மையுடன், சந்திரபாபு ஆட்சியை நீக்கிவிட்டு ஆட்சி அமைக்க இருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. 10 வருட கனவு அவருக்கு இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது.. அவரின் அறை வாசலில் இப்போதே ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வர் என்ற போர்ட் தொங்குகிறது.. ஆனால் அந்த போர்டுக்கு பின் இருக்கும் வரலாறுதான் மிக நீண்டது!

    English summary
    Lok Sabha Elections Results 2019: The new Andhra CM Jaganmohan Reddy and his story of Ash crown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X