ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எளிய மக்களுக்கு உயர்தரத்துடன் இலவச சேவை வழங்கும் எல்வி பிரசாத் கண் மருத்துவமனை!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் உள்ள எல்வி பிரசாத் கண் மருத்துவமனை தரமான கண் பராமரிப்பு மற்றும் கண் கோளாறுகளுக்கு சிகிச்சையளித்து வருகிறது.

அனைத்து நோயாளிகளுக்கும் பணம், இருக்கிறதா? இல்லையா? ஏழையா? பணக்காரர்களா? என்ற பேதம் இல்லாமல் ஒரே உயர்தரத்துடன் எல்விபிஇஐ சிகிச்சை அளித்து வருகிறது.

தரமான சிகிச்சை அளிக்கும் எல்வி பிரசாத் கண் மருத்துவமனை

தரமான சிகிச்சை அளிக்கும் எல்வி பிரசாத் கண் மருத்துவமனை

உலகளாவிய சுகாதார விநியோக முறைகள் பல முனைகளில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கின்றன. ஹைதராபாத் கண் நிறுவனம் (ஹெச்இஐ) இயக்கும் எல்வி பிரசாத் கண் நிறுவனத்தின் (எல்விபிஇஐ) மாதபூர் மையம் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் தரமான கண் பராமரிப்பு மற்றும் கண் கோளாறுகளுக்கு சிகிச்சையளித்து வருகிறது.

பேதம் இல்லாமல் சிகிச்சை

பேதம் இல்லாமல் சிகிச்சை

34 ஆண்டுகளுக்கு முன்பு 1987-ம் ஆண்டில் ஹைதராபாத்தில் நியாயம், செயல்திறன் மற்றும் சிறப்பான சிகிச்சை என்ற வகையில் சேவையை தொடங்கியது எல்வி பிரசாத் கண் நிறுவனம். ஈக்விட்டி(நியாய முறை) என்பது அனைத்து நோயாளிகளுக்கும் பணம், இருக்கிறதா? இல்லையா? ஏழையா? பணக்காரர்களா? என்ற பேதம் இல்லாமல் ஒரே உயர்தரத்துடன் சிகிச்சையளிப்பதாகும்.

சிறந்த சேவைதான் ஒரே குறிக்கோள்

சிறந்த சேவைதான் ஒரே குறிக்கோள்

கிடைக்கக்கூடிய சிறந்த கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஆராய்ச்சியின் முடிவுகளை மருத்துவ நடைமுறையில் மொழிபெயர்ப்பது, தேவைக்கேற்ப கொள்கையை உருவாக்குதல் அல்லது மாற்றுவது என்பது செயல்திறனில் அடங்கும். ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு வளாகங்களில் அமைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் எல்விபிஇஐ அடைய முயற்சிக்கும் ஒரு சிறந்த குறிக்கோள் விரிவான நோயாளி பராமரிப்பு, பார்வை மேம்பாடு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குவது என்பதாகும்.

ஏழை, எளிய மக்களுக்கு இலவச சேவை

ஏழை, எளிய மக்களுக்கு இலவச சேவை

சமுதாயத்தில் மிகவும் கீழ் நிலையில் உள்ள மக்களின் சுகாதார நலனையும் கருத்தில் கொண்டு தரமான, லாப நோக்கமற்ற சேவைகளை வழங்கி வரும் எல்.வி.பிரசாத் கண் நிறுவனம், தொலைதூர கிராமங்களில் முதன்மை கண் பராமரிப்பு மையமாக இருக்கும் விஷன் சென்டரைக் கொண்டுள்ளது. பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்ட்ட பிரிவுகளைச் சேர்ந்த 50% நோயாளிகள் எல்விபிஇஐயில் அனைத்து இடங்களிலும் இலவசமாக சிகிச்சை பெறுகின்றனர். பல ஆண்டுகளாக, அர்ப்பணிப்புள்ள மற்றும் சிந்தனையுள்ள தனிநபர்கள், கார்ப்பரேட் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தாராள மனப்பான்மையால் ஆயிரக்கணக்கான எல்விபிஇஐ உதவியுடன் மக்கள் பார்வையை மீட்டெடுத்துள்ளனர்.

50% மக்களுக்கு இலவச சேவை

50% மக்களுக்கு இலவச சேவை

கண்புரை முதல் புற்றுநோய் வரையிலான 50% நோயாளிகளுக்கு ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எல்விபிஇஐயின் 4 மூன்றாம் நிலை மையங்கள், 20 இரண்டாம் நிலை மையங்கள், மற்றும் 200 பிளஸ் பார்வை மையங்களில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சேவை வழங்கி வருகிறது. இந்த கொரோனா காலத்திலும் எல்விபிஇஐ 50% ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை செய்வதுடன் மிகுந்த அர்ப்பணிப்புடன் இன்னும் தேவைப்படுபவர்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக இருக்கிறது.

ஊழியர்கள் கனிவுடன் நடத்தப்படுகின்றனர்

ஊழியர்கள் கனிவுடன் நடத்தப்படுகின்றனர்

கொரோனா காலத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான கண் பரிசோதனை, புனர்வாழ்வு பராமரிப்பு பார்வை குறைபாடு மற்றும் குருட்டுத்தன்மை உள்ளவர்களுக்கு நவீன முறையில் தகுந்த முன்னேற்பாடுகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. எல்விபிஇஐ நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுமார் 2900 ஊழியர்கள் வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு என எந்தவித நெருக்கடியும் இல்லாமல் வேலை செய்து வருகின்றனர்.

English summary
LV Prasad Eye Hospital in Hyderabad offers quality eye care and treatment for eye ailments
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X