ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உடம்பில் காயங்கள் இல்லை.. கிணற்றில் மிதந்த 9 தொழிலாளர்களின் சடலங்கள்.. தெலுங்கானாவில் பரபரப்பு

தெலுங்கானாவில் 9 தொழிலாளர்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: மொத்தம் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களை போலீசார் பாழுங் கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.. இவர்கள் யார் உடம்பிலும் எந்த காயங்களும் இல்லை.. அதனால் இந்த 9 பேருமே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.. இந்த சம்பவம் தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியில் நடந்து, ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் புறநகரில் ஒரு கிணறு உள்ளது.. கீசுகொண்டா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி இது. இங்கு நேற்றிரவு 5 பேர் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதனால் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று அந்த கிணற்றில் விழுந்து கிடந்தவர்களை மீட்க ஆரம்பித்தனர்.. நீண்ட நேரம் போராடி 5 பேரின் உடல்களை மீட்டனர்.

செத்து போன நாயின் இறைச்சியை.. பிய்த்து எடுத்து சாப்பிட்ட தொழிலாளர்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ.. ஷாக்செத்து போன நாயின் இறைச்சியை.. பிய்த்து எடுத்து சாப்பிட்ட தொழிலாளர்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ.. ஷாக்

சடலங்கள்

சடலங்கள்

இதனிடையே, இன்று காலை அதே கிணற்றில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.. அதனால் அவர்களை மீட்கும் பணி நடந்தது.. இறுதியில் 9 பேரின் சடலங்கள் வெளியே எடுக்கப்பட்டன.. இவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் எல்லோருமே புலம் பெயர் தொழிலாளர்கள் ஆவர்.. மேற்கு வங்கம், பீகாரை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

தற்கொலை?

தற்கொலை?

இதில் கொடுமை என்னவென்றால், இவர்களில் யார் உடம்பிலும் எந்த காயமும் இல்லை.. அதனால் 9 பேருமே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. கோரே குந்தா என்ற கிராமத்தில் ஒரு கோணிப்பை தயாரிக்கும் பேக்டரி இயங்கி வருகிறது.. சந்தோஷ் என்பவர்தான் இந்த தொழிற்சாலையை நடத்தி வருகிறார். பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வேலை பார்த்து வந்துள்ளனர்.

மசூத் குடும்பம்

மசூத் குடும்பம்

அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த மசூத் என்பவரும் ஒருவர்.. ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்.. பேக்டரி மூடப்படவும் வாடகை தரமுடியவில்லை.. அதனால்தான் மசூத் குடும்பத்தினருக்கு சந்தோஷ் என்பவர் தனக்கு சொந்தமான குடோனில் இவர்களை தங்க இடம் தந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மசூத் குடும்பத்தினரை காணவில்லை என்று சந்தோஷ் போலீசில் புகார் தரவும், அவர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.

பாழுங்கிணறு

நேற்றிரவு 5 பேரின் சடலங்கள் கிணற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்து போலீசார் சென்றுள்ளனர். அவர்கள் சடலத்தை மீட்ட பிறகு இன்று மேலும் 4 சடலங்களை போலீசார் மீட்டனர்.. அவர்கள் பீகாரைச் சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம் மற்றும் ஷாம், திரிபுராவைச் சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவருமே அந்த கோணிப்பை தொழிற்சாலையில் 20 வருஷத்துக்கும் மேலாக வேலை பார்த்து வந்தவர்களாம்.. இந்த பேக்டரிக்கு பக்கத்தில்தான் இந்த கிணறும் உள்ளது. உயிரிழந்த 9 பேரில் 3 வயது குழந்தையும், 2 வயது குழந்தையும் அடக்கம் என்பது நெஞ்சை பிசையும் கூடுதல் தகவல் ஆகும்.

பரபரப்பு

பரபரப்பு

ஒரே கிணற்றில் நேற்றிரவு, இன்றும் என இந்த இரண்டே நாட்களில் 9 பேரின் சடலங்கள் மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... பசி கொடுமையால் புலம்பெயர் தொழிலாளர்கள் சுருண்டு மாண்டு வரும் நிலையில், இப்படி, குழந்தை குட்டியுடன் தற்கொலையிலும் ஈடுபட்டு வருவது நாட்டையே அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கி வருகிறது.

English summary
migrant workers: migrant workers suicide in well near warangal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X