ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வலியால் துடித்த கர்ப்பிணி.. நிறை மாசம்.. ஆம்புலன்ஸும் இல்லை.. மின்னல் வேகத்தில் உதவிய ரோஜா.. சபாஷ்!

கர்ப்பிணி பெண்ணுக்கு எம்எல்ஏ ரோஜா உதவினார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: நிறைமாத கர்ப்பிணி.. ஆஸ்பத்திரியில் போதுமான வசதி இல்லை.. ஆம்புலன்சும் இல்லை.. பிரசவ வலியால் துடித்த பெண்ணை தன்னுடைய சொந்த காரில் ஏற்றி வேறு ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்தார் நடிகை ரோஜா!!

நடிகை ரோஜா, தீவிரமான அரசியலில் களம் இறங்கி உள்ளனர்.. ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதி எம்எல்ஏஆக இருப்பவர்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் தன்னுடைய ரோல் மாடல் என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பவர்.

ஜெயலலிதாவை மனதில் வைத்துதான், நகரி தொகுதியில் 4 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் உணவகத்தை திறந்து வைத்தார்.. திறப்பு நாள் அன்றுகூட இதை நினைவுபடுத்தவே செய்தார்.. இந்த உணவகத்துக்கு மக்களிடம் இது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆந்திரா

ஆந்திரா

சமீபத்தில் ஆந்திராவில் இருந்து சீனா சென்று உணவு கூட கிடைக்காமல் அவதிப்பட்ட 58 பேரை பத்திரமாக மீட்டு அழைத்து வர நடவடிக்கையும் மேற்கொண்டவர்.. இப்படி ரோஜாவின் பல்வேறு செயல்கள் மக்களை கவனிக்க செய்து வருகிறது. அந்த வகையில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு தானாக முன்வந்து ரோஜா உதவி செய்துள்ளார்.

நகரி தொகுதி

நகரி தொகுதி

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பெரும் பதட்டத்தில் உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நகரி தொகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு ரோஜா சென்றிருக்கிறார்.. அவர் சென்ற சமயம் அங்கு பிரசவத்திற்காக ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. ஆனால் பிரசவம் பார்க்க அந்த ஆஸ்பத்திரியில் போதுமான வசதி இல்லை என்பதை அறிந்தார்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

அதனால் மேல்சிகிச்சைக்காக திருப்பதி மகளிர் ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்களும் தெரிவித்தனர்.. இதை கவனித்த ரோஜா பதறிபோய்விட்டார்... உடனடியாக ஆம்புலன்ஸ் ஏதாவது வரவழைத்து பெண்ணை ஏற்றி செல்லுங்கள் என்றார்.. அதன்படியே ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது.. ஆனால் வந்து கொண்டிருந்த அந்த ஆம்புலன்சும் திடீரென நடுவழியில் ரிப்பேர் ஆகி நின்றுவிட்டது.

சொந்த கார்

சொந்த கார்

அதனால் வேறு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் முயன்றனர்.. எனினும் இன்னொரு ஆம்புலன்ஸ் வண்டி வரும் வரை காத்திருக்காமல், தன்னுடைய சொந்த காரை கொடுத்து, கர்ப்பிணியை அதில் ஏற்றி உட்கார வைத்தார்.. அந்த காரில்தான் கர்ப்பிணியை ஏற்றி சென்று திருப்பதி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. இந்த செயலை கண்டு ஆஸ்பத்திரி வளாகமே நெகிழ்ந்துவிட்டது

English summary
actress and nagari mla roja helped a pregnant lady
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X