ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 தொகுதிகளை விட்டுடுங்க... மத்த 111-லும் அவங்களுக்கே குத்துங்க.. இதுதான் டிஆர்எஸ் வெற்றி பெற காரணம்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: 8 தொகுதிகளை மட்டும் விட்டுட்டு மற்ற 111 தொகுதியிலும் டிஆர்எஸ் கட்சிக்கே வாக்களித்து விடுமாறு ஏஐஎம்ஐஎம் கட்சி மறைமுக தேர்தல் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறது. இதற்கு என்னதான் சந்திரசேகர ராவின் மக்கள் நல பணிகள் என்று கூறப்பட்டாலும் இன்னொரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது இத்தகைய வரலாற்று சாதனையை டிஆர்எஸ் படைப்பதற்கு முஸ்லிம் மக்களும் ஏஐஎம்ஐஎம் கட்சியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இந்த தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிட்டது.

ஆதரியுங்கள்

ஆதரியுங்கள்

119 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அக்கட்சி தன் சமூகத்து மக்களிடம் 8 தொகுதிகளில் மட்டுமே நமது கட்சிக்கு வாக்களியுங்கள். மற்ற 111 தொகுதிகளில் டிஆர்எஸ் கட்சியை மட்டுமே ஆதரியுங்கள் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மதிப்பூதியம்

மதிப்பூதியம்

அதாவது மறைமுகமாக டிஆர்எஸ் கட்சிக்கு முஸ்லிம் கட்சி பிரசாரம் செய்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ் முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். மசூதிகளில் உள்ள மியூசின்கள் (பிரார்த்தனைகளுக்கு அழைப்பவர்கள்) மற்றும் இமாம்கள் ஆகியோருக்கு மதிப்பூதியத்தை அதிகரித்துள்ளார்.

இயலாத காரியம்

இயலாத காரியம்

அவ்வப்போது முஸ்லிம்களின் நம்பிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்குவார். உருது மொழியில் பேசி அவர் முஸ்லிம்களை நேசிப்பதை உணர்த்தினார். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக இருந்ததை கடந்த 4 ஆண்டுகளில் 12 சதவீதமாக உயர்த்தியவர் சந்திரசேகர ராவ். தேர்தல் பிரசாரத்தில் ராவ் இவ்வாறு வாக்குறுதி அளித்ததை காங்கிரஸின் குலாம் நபி ஆசாத்தும், ரேவந்த் ரெட்டியும் ஏற்கெனவே 4 சதவீத இடஒதுக்கீடே மிகவும் போதுமானதுதான். 12 சதவீதம் கொடுப்பது என்பது இயலாத ஒன்று, ராவ் மக்களை ஏமாற்ற பார்க்கிறார் என்றனர்.

நிலைப்பாடு

நிலைப்பாடு

ஆனால் அதையும் ராவ் நடத்திக் காட்டிவிட்டார். தெலுங்கானாவில் நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் கூட சுவாமி பரிபூரநந்தாவை பிரசாரம் மாநில முழுவதும் அதுவும் ராவ் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்பது போல் பிரசாரம் செய்ய பாஜக நியமித்தது. அதுமட்டுமல்லாமல் ஏஐஎம்ஐஎம் தலைவர் அதாதுதீன் ஒவைஸி உள்ளிட்டோர் மீது நெருப்பை உமிழ்ந்தனர். இதையெல்லாம் மனதில் கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும் பாஜகவுக்கும் எதிரான நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் எடுக்க வைத்தது என கூறப்படுகிறது.

English summary
The shift in the Muslim vote was also facilitated by the decision of the All India Majlis-e-Ittehadul Muslimeen (MIM) to contest in only eight seats, and indirectly campaign for the ruling TRS in the other 111assembly segments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X