ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹைதராபாத் என்கவுண்டர்.. போலீசாருக்கு எதிராக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    என்கவுண்டர் செய்த போலீசாரை குண்டு கட்டாக தூக்கி மகிழ்ந்த பொதுமக்கள் !

    ஹைதராபாத்: பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, காவல்துறையினரால் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.

    இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு, திமுக எம்.பி.யான கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் மொத்தம் நான்கு பேரை குற்றவாளிகள் என கூறி கைது செய்திருந்தனர். அவர்கள் போலீசாரால் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்துக்களை பாருங்கள்.

    4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? சைபராபாத் போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? சைபராபாத் போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி

    குற்றவாளி வேறு நபர்

    ரியான் பள்ளி கொலை வழக்கு நினைவில் இருக்கிறதா? கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட பஸ் கண்டக்டரை, போலீசார் கைது செய்தனர். பின்னர், சிபிஐ விசாரித்தது. அப்போதுதான், போலீஸ் அவரை குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியது என்றும் உண்மையான குற்றவாளி வேறு என்று கண்டறியப்பட்டது. ஹைதராபாத் வழக்கிலும் இதேதான் நடந்திருந்தால் என்ன செய்வது? அதனால்தான் போலி என்கவுண்டர் மோசமானது.

    திட்டம்

    தெலுங்கானா முதல்வர் வெளியிட்ட ட்வீட்டை ரீ டுவிட் செய்த ஒரு நெட்டிசன், குற்றவாளிகளை சம்பவம் நடந்த இடத்துக்கே கூட்டி செல்லுங்கள். அங்கே தப்ப முயல்வார்கள், போலீசாரும் 'வேறு வழியின்றி' சுட்டுக் கொல்வார்கள் என்று தெரிவித்திருந்தார். இது நடந்து 4 நாட்கள் இருக்கும். இதே கருத்தை அப்படியே தெலுங்கானா அரசு எடுத்துக்கொண்டு, என்கவுண்டர் நடத்தியிருக்க கூடும் என்கிறார் இந்த நெட்டிசன்.

    யார் கொலை செய்தாலும் தவறுதான்

    கொலை தவறு. அதை யார் செய்தாலும் தவறுதான்.. இப்படி சொல்லி காவல்துறை என்கவுண்டர் செய்ததை தவறு என்கிறார் இந்த நெட்டிசன்.

    விளைவுகள் என்னவாகும்

    என்கவுண்டரை இயல்பாக்குவதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியுமா?

    * அடுத்த முறை காவல்துறையினர் தங்கள் கவுரவத்தை காப்பாற்ற யாரை வேண்டுமானாலும் கைது செய்வார்கள்

    * சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த அவர்களைக் கொல்லுவார்கள்

    *அரசியல்வாதிகள் என்கவுண்டர்களால் லாபம் பெறுவார்கள்

    * உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக இருப்பார்கள்.

    * இந்த பட்டியலில் அடுத்து நீங்கள் கூட இருக்க முடியும்

    சந்தேகங்கள்

    அதிகாலை 3.30 மணிக்கு குற்றம் நடந்த இடத்திற்கு செல்வார்களா?

    குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ஒன்றாக அழைத்து செல்லப்பட்டனரா?

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரை இருளில் தாக்க முயன்றார்களா?

    குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் இறந்துவிட்டனர், ஆனால் எந்த போலீசாருக்கும் எதுவும் நடக்கவில்லை?

    குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் உண்மையான குற்றவாளிகளா என்பதில் சந்தேகம் வலுவடைகிறது

    English summary
    Netizens criticize Hyderabad police encounter on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X