• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மலை உச்சியில் "ரொமான்ஸ்".. மனைவிக்கு ஜூஸ் தந்து.. தெலுங்கானாவையே திகைக்க வைத்த கணவன்..!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: மலைஉச்சிக்கு மனைவியை அழைத்து சென்று ஜூஸ் தந்தார் கணவர்.. காரணம் என்னவென்று கேட்காமலேயே மனைவியும் அதை குடித்துவிட்டார்.. அதன்பிறகுதான் அந்த பயங்கரம் அரங்கேறியது..!

தெலுங்கானா மாநிலத்தின், மண்டல் மாவட்டத்தின் அயவரிகடம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நவ்யா ரெட்டி.. 22 வயதாகிறது.. பிடெக் 2-ம் வருடம் படித்து வந்துள்ளார்.. இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. சொந்தக்காரர் நாகசேசு ரெட்டி என்பவரை, வீட்டில் பார்த்து கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.

தம்பதி இருவரும் கோத்தலங்கப்பள்ளி என்ற ஊரில் தனிக்குடித்தனத்தை ஆரம்பித்தனர்.. ஆனால், கடந்த வாரம் திடீரென நவ்யாவை காணவில்லை.. அதனால் பல இடங்களில் பதறி போய் தன் மனைவியை தேடினார் கணவர்..

 சிக்னல்

சிக்னல்

இறுதியில் யெருபாலம் போலீசில் சென்று புகார் தந்தார்.. போலீசாரும் நவ்யாவை தேட ஆரம்பித்தனர்.. அப்போது அவரது செல்போன் நம்பர் சிக்னல் வைத்தும் அவரை தேடும் பணி ஆரம்பமானது.. மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை துரிதமானது.

பைக்

பைக்

இதில், முத்தகுடெம், குப்பெனகுந்த்லா போன்ற பகுதிகளிலும் இருந்த சிசிடிவி ஆராயப்பட்டது.. அப்போது ஒரு பைக்கில் நவ்யா பின்னாடி உட்கார்ந்து செல்வது பதிவாகி இருந்தது.. அந்த பைக்கை ஓட்டி சென்றது நவ்யாவின் கணவர் ஆவார்.. இதனால் போலீசாருக்கு அப்படியே நாகசேசு மீது சந்தேகம் திரும்பியது.. தங்கள் பாணி விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான் அந்த பகீர் வாக்குமூலத்தை சொன்னார்.

காதல்

காதல்

கல்யாணத்துக்கு முன்னாடி நாகசேசு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. அந்த பெண் பெயர் வீனிலா... அவரை அந்த பெண்ணின் குடும்பத்தினரின் விருப்பத்தின்பேரில் கல்யாணமும் செய்துள்ளார்.. ஆனால், தன் குடும்பத்தினர் நவ்யாவை தனக்கு கட்டி வைக்கவும் வெறுப்பில் இருந்துள்ளார்.. காதலியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்ததால், நாகசுசு மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்..

 மலைஉச்சி

மலைஉச்சி

நவ்யா உயிரோடு இருக்கும்வரை, தன்னால் காதலியுடன் வாழ முடியாது என்பதால், நவ்யாவை கொலை செய்ய முடிவெடுத்தார். இந்த கொலை முடிவை காதலியிடம் சொல்லவும், அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அதன்படி சம்பவத்தன்று, நவ்யாவை குக்கலகுட்டா என்ற மலைஉச்சிக்கு அழைத்து சென்றுள்ளார் நாகசேசு... அங்கு அவரிடம் ஆசை வார்த்தைகளாய் பேசி உள்ளார்.. பிறகு களைப்பாக இருக்கிறாய் என்று சொல்லி ஜூஸ் தந்துள்ளார்.. அந்த ஜூஸில் தூக்க மாத்திரைகளை கலந்து தந்துள்ளார்..

துப்பட்டா

துப்பட்டா

இது தெரியாமல், நவ்யா அதை குடித்ததும் மயங்கி விழுந்துள்ளார்.. உடனே அவரது துப்பட்டாவையே எடுத்து நவ்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பிறகு, மலையிலேயே நவ்யாவின் சடலத்தை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். மேலும் நவ்யாவின் செல்போனில் இருந்து, நவ்யாவின் அப்பாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார்.. அதில், "அப்பா.. என்ஜினியரிங் படிக்க முடியாமல் போனதால், நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன்" என்று நவ்யா போலவே மெஸேஜ் அனுப்பி இருக்கிறார்..

கைது

கைது

இதற்கு பிறகுதான் மனைவியை காணவில்லை என்று தேடுவது போல நடித்துள்ளார்... இதையடுத்து, போலீசார் குக்கலகுட்டா மலைப்பகுதிக்கு ஓடினர்.. அங்கே சிதைந்த நிலையில் நவ்யாவின் சடலம் கிடந்தது.. அதை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. நாகசேசுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. இதனிடையே, போலீசில் இப்படி மாட்டுக் கொண்டோமே என்று பயந்து போன அந்த காதலி வீனிலா, தொண்டலகோபரம் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்... மனைவியை கொலை, காதலி தற்கொலை, கணவன் ஜெயிலில் என்ற அடுத்தடுத்த சம்பவம் தெலுங்கானா மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

English summary
Newly Married girl murdered by husband in Telangana
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X