• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

நிர்வாணப்படுத்தி.. மகள்களின் தலைமுடியை வெட்டி.. கொன்று.. "நான்தான் சிவன்".. அலறிய பத்மஜா !

|

ஹைதராபாத்: "நான்தான் சிவன், என்கிட்ட இருந்துதான் கொரோனாவே உலகத்துக்கு பரவுச்சு.. எனக்கே டெஸ்ட்டா" பெற்ற மகள்களை கொடூரமாக கொன்ற பத்மஜா புலம்பியது சித்தூர் போலீசாரையே மிரள வைத்துவிட்டது.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள சிவாநகர் காலனியில் வசித்து வருபவர்கள் மல்லுரு புருஷோத்தன் நாயுடு - பத்மஜா தம்பதி... புருஷோத்தன் மதனப்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் காலேஜில் துணை முதல்வர்.. பத்மஜா தான் சொந்தமாக நடத்தி வரும் தனியார் காலேஜில் பேராசிரியர்...

இவர்களுக்கு அலெக்யா என்ற 27 வயது மகளும், சாய் திவ்யா என்ற 22 வயது மகளும் உள்ளனர்.. இரு மகள்களுமே படிப்பில் கெட்டிக்காரர்கள்.. திறமைசாலிகள்... புருஷோத்தன் குடும்பத்தினர் வினோத பூஜைகளில் அதிக நாட்டம் கொண்டவர்களாம்.. அதேபோல, கல்வியிலும், செல்வத்திலும் புரண்டு வந்துள்ளது..

பணக்காரர்கள்

பணக்காரர்கள்

ஆனால், இன்னும் பணக்காரர்கள் ஆக வேண்டும், வசதிகள் பலமடங்கு பெருக வேண்டும் என்பதற்காக பல்வேறு பூஜைகளை செய்து வந்துள்ளனர்... அதன் உச்சமாக, பெற்ற மகள்களை நரபலி தந்தால் ஏழேழு ஜென்மத்துக்கும் குடும்பம் செழிக்கும் என்று யாரோ ஒரு மந்திரவாதி சொன்னாராம். அவர் பேச்சை கேட்டுக் கொண்டுதான், கடந்த ஞாயிற்றுக்கிழமை நரபலிக்கு தம்பதி இருவரும் தயாரானார்கள்.. நடுராத்திரி வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்கவும்தான் அந்த பகுதியில் இருந்தவர்கள் புருஷோத்தன் வீட்டின் முன்பு கூடி, பிறகு சித்தூர் போலீசுக்கு தகவல் தந்து அவர்களை வரவழைத்துள்ளனர்.

நிர்வாண நிலை

நிர்வாண நிலை

போலீசார் கதவை உடைத்துகொண்டு போனால், அலெக்யாவும், சாய் திவ்யாவும் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்... போலீஸ் வந்தும்கூட, அந்த தம்பதி சாவகாசமாக பூஜை செய்துகொண்டிருந்தார்கள்... முகத்தில் ஒரு டென்ஷனும், சலனமும் இல்லை.. பிறகு தம்பதி மற்றும் அந்த சாமியாரை கைது செய்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது.. இங்குதான் போலீசார் குழம்பி போய் கிடக்கிறது.

கொரோனா டெஸ்ட்

கொரோனா டெஸ்ட்

பத்மஜாவை முதலில் கொரோனா டெஸ்ட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. ஆனால், அவர் மனநிலை சரியில்லாதவரை போல நடந்து கொண்டுள்ளார்.. கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவவில்லை என்று திடீரென சத்தமாக சொன்னாராம்.. இந்த உலகத்தில் உள்ள தீயவர்களை அழிக்க கடவுளால் உருவாக்கப்பட்டது என்று கத்தினார்.. நான்தான் சிவன்.. என்கிட்ட இருந்துதான் கொரோனாவே இந்த உலகத்துக்கு வந்தது.. எனக்கே கொரோனா டெஸ்ட்டா? இன்னும் 2 மாசம்தான், மார்ச் வந்துடும்..மார்ச் மாசத்திற்கு பிறகு கொரோனாவுக்கு மருந்தே தேவைப்படாது.. பார்த்துட்டே இருங்க என்றார்.

ஆஜர்

ஆஜர்

இதனால் போலீசார் செய்வதறியாது தவித்தனர்.. பிறகு தம்பதி இருவரையுமே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.. ஆனால், போலீசாருக்கு குழப்பம் என்னவென்றால், பத்மஜாவுக்கு நிஜமாகவே மனநிலை பாதிப்பு ஏற்பட்டு விட்டதா? அல்லது நடிக்கிறாரா? என்று தெரியவில்லை.. ஆனால், அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயலும்போதுகூட கூச்சலிட்டு கொண்டே இருந்தார்.. அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா டெஸ்ட் செய்வதற்காக அழைத்து செல்லப்பட்டபோது, ஒரு சேரில் அவரை உட்கார வைத்திருந்தனர்.. சுடிதார் அணிந்திருந்தார்.. அப்போதும் அவர் வாய் சும்மா இல்லை.. ஏதேதோ தலையை ஆட்டி ஆட்டி பேசினார்.. ஆனால் நார்மலாக பேசவில்லை.. தெலுங்கில் பேசினார், பிறகு போலீசாரை பார்த்ததும் இங்கிலீஷில் திட்டினார்..

மகள்கள்

மகள்கள்

இந்த வழக்கில் இன்னொரு சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.. 2 மகள்களையும் அம்மா, அப்பா இருவர் மட்டுமே கொன்றிருக்க முடியாது என்கிறார்கள்.. அதனால், இந்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்னொரு சந்தேகமும் உள்ளது, ஒருவேளை 2 மகள்களையும் வேறு யாராவது, வேறு எந்த காரணத்திற்காக கொன்றுள்ளனரோ என்றும் யூகிக்கப்பட்டு வருகிறது.

தலைமுடிகள்

தலைமுடிகள்

இரு மகளையும் நிர்வாணப்படுத்திவிட்டு, அவர்களின் தலைமுடிகளை வெட்டி உள்ளனர்.. அவர்கள் தலையில் பெரிய காயங்கள் இருந்திருக்கிறது.. வாயில் சிறிய தண்ணீர் குவளை அடைத்து திணித்து வைக்கப்பட்டிருந்தது.. இருவரையும் கொன்றுவிட்டு, தம்பதி அவர்களுக்கு அங்கேயே சடங்கு செய்திருக்கிறார்கள்.. பிறகு ஐயையோ, தேவையில்லாமல் எங்கள் மகள்களை கொன்றுவிட்டோமே என்று அழுது புலம்பியும் உள்ளனர்.. திடீரென, செத்து போன 2 மகள்களும் இப்போது உயிரோடு வந்துவிடுவார்கள் என்று போலீசாரிடம் சொல்லியும் உள்ளனர். இது அடுத்த குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

விசாரணை

விசாரணை

இப்போதைக்கு 14 நாட்கள் காவலில் இந்த தம்பதி இருக்கிறார்கள். உடனடியாக அவர்களிடம் விசாரணையை தொடங்கவும் முடியாது.. அதனால் சில டெஸ்ட்களை அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் எடுக்க வேண்டி உள்ளதால், அதெல்லாம் முடிந்த பிறகு, ஆவேசம் குறைந்த பிறகுதான் விசாரணையை நடத்த உள்ளனர்.. அதன்பிறகுதான் இந்த வழக்கின் போக்கு மாற போகிறது.. ஆனால், அந்த பிள்ளைகள் 2 பேரும் இறந்த அதிர்ச்சியும், அதன் கொடூரமும் இன்னும் நம் கண்ணை விட்டு அகலவே இல்லை. இருவரும் எப்படியெல்லாம் வலியால் துடித்தார்களோ.. கதறினார்களோ.. அலறினார்களோ.. நினைச்சுகூட பார்க்க முடியவில்லை..!

English summary
Nude and killed two daughters by Chittoor parents in Andhra Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X