ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைதராபாத் அருகே கூட்டத்தில் புகுந்த பேருந்து.. அடுத்தடுத்து விபத்து.. ஒருவர் பலி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: செகந்திராபாத்தில் அரசு பேருந்து, கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பான வீடியோவும் வைரலாகி உள்ளது.

மியாபூர் பகுதியிலிருந்து, அரசு பேருந்து ஒன்று, செகந்திரபாத் நகரை நோக்கி, 50 பயணிகளுடன் சென்றது. கோபாலபுரம் என்ற பகுதியில் சென்றபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.

One died after a bus hit a car, an autorickshaw, a two wheeler in secunderabad, cctv released

அப்போது சாலையோரம் நின்றிருந்த கூட்டத்திற்கு புகுந்த பேருந்து, இறுதியில், மெட்ரோ ரயில் தூணில் மோதி நின்றது. இந்த கோரச் சம்பவத்தின் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.

அந்த காட்சியின் அடிப்படையில் பேருந்து விபத்தில் சிக்கியது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலயாகி உள்ளார். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேருந்து ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Telangana State Road Transport Corporation bus hit a car, an autorickshaw, a two-wheeler&ran over pedestrians near Clock Tower in Secunderabad. one died, 3 injured in that incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X