ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மே 21ல் முக்கிய மீட்டிங்.. அன்றே பிரதமரை தேர்வு செய்வோம்.. எதிர்க்கட்சிகள் அதிரடி திட்டம்!

லோக்சபா தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே மே 21ம் தேதி பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வோம் என்று ஆந்திர பிரதேச சந்திரபாபு நாயுடு விளக்கி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மே 21ல் முக்கிய மீட்டிங்.. அன்றே பிரதமரை தேர்வு செய்வோம் - சந்திரபாபு நாயுடு- வீடியோ

    ஹைதராபாத்: லோக்சபா தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே மே 21ம் தேதி பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வோம் என்று ஆந்திர பிரதேச சந்திரபாபு நாயுடு விளக்கி உள்ளார்.

    லோக்சபா தேர்தல் முடியும் தருவாயை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதுவரை 4 கட்ட லோக்சபா தேர்தல்கள் முடிந்துள்ளது. மே 23 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்தியாவின் புதிய பிரதமராக யார் பொறுப்பேற்பார் என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன, பிரதமராக வரப்போவது யார் என்பது குறித்து ஆந்திர பிரதேச சந்திரபாபு நாயுடு விளக்கி உள்ளார். தேர்தலுக்கு பின் என்ன நடக்க போகிறது என்று விளக்கி உள்ளார்.

    என்ன நடக்கிறது திமுக, அதிமுகவில்? 40 திமுக எம்எல்ஏக்கள் வருவாங்க.. அதிர வைக்கும் அமைச்சர் பேச்சு என்ன நடக்கிறது திமுக, அதிமுகவில்? 40 திமுக எம்எல்ஏக்கள் வருவாங்க.. அதிர வைக்கும் அமைச்சர் பேச்சு

    ஆசை இல்லை

    ஆசை இல்லை

    சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில், எனக்கு பிரதமர் ஆக ஆசையில்லை. எனக்கு இங்கே ஆந்திராவில் இருக்க மட்டுமே விருப்பம். பெரிய பதவிகளில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்தது கிடையாது. என்னை யாரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் சேர்க்க வேண்டாம்.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    ஆனால் எனக்கு பிரதமரை தேர்வு செய்வதில் விருப்பம் உள்ளது. மோடியை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது என் நோக்கம். அதை நான் கண்டிப்பாக செய்வேன். பாஜகவிற்கு எதிரான கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த மோடியை அந்த பதவியில் இருந்து கீழே இறக்குவோம்.

    மோடி கதை என்ன

    மோடி கதை என்ன

    மே 23ம் தேதி பிரதமர் மோடி வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் இதற்காக மே 21ம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்த இருக்கிறோம். பிரதமர் பதவிக்கு தகுதியான நபரை இந்த கூட்டத்தில் நாங்கள் தேர்வு செய்வோம்.

    ஆணையம் மோசம்

    ஆணையம் மோசம்

    இந்த தேர்தலில் நிறைய குளறுபடி நடந்து இருக்கிறது. முக்கியமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எதுவும் வேலை செய்யவில்லை. நிறைய இடங்களில் இந்த எந்திரங்களில் முறைகேடு நடந்து உள்ளது. இதை நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் விசாரிப்போம் என்று, சந்திரபாபு நாயுடு விளக்கி உள்ளார்.

    English summary
    Opponent parties planned to elect PM by May 21 says, Andhra CM Chandrababu Naidu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X