ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சிகளை தேடி செல்லும் சந்திரபாபு நாயுடு.. ஆனால் அவர்கள் யாரை நாடி ஓடுகிறார்கள் பாருங்க!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸையும் டிஆர்எஸ் கட்சியையும் தேடி செல்கின்றனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானாலும் வெளியானது எதிர்க்கட்சிகள் தூக்கத்தை தொலைத்துவிட்டு கதி கலங்கியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர்.

என்னோட ராசி நல்ல ராசின்னு நாளைக்கு பாடப்போறவங்க யார்- லோக்சபா தேர்தல் ரிசல்ட் 2019 என்னோட ராசி நல்ல ராசின்னு நாளைக்கு பாடப்போறவங்க யார்- லோக்சபா தேர்தல் ரிசல்ட் 2019

மும்முரம்

மும்முரம்

மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 3-ஆவது அணியை அமைத்துவிடக் கூடாது என்பதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மும்முரம் காட்டி வருகிறார்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இதற்காக அவர் இரவு பகல் பாராது எதிர்க்கட்சியினரை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் ஆந்திரத்தை பொருத்தவரை சட்டசபை தேர்தலிலும் லோக்சபா தேர்தலிலும் அதிக இடங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெற்றுவிடும் என்றும், அது போல் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் ஆதிக்கமே இருக்கும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்ற இணைந்துள்ள எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு பிறகு தெலுங்கானா முதல்வர் மற்றும் ஆந்திரத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை நாடிச் செல்கின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சி

தெலுங்கு தேசம் கட்சி

இதனால் கேசிஆர் கட்சிக்கு துணை பிரதமர் பதவி கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. ஒரு பக்கம் ஆந்திர முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மறுபக்கம் தெலுங்கானா முதல்வரை நோக்கி எதிர்க்கட்சிகள் மொய்த்து செல்வதை பார்த்தோமேயானால் தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கு சரிகிறது என்றே கூறப்படுகிறது.

English summary
Opposition parties are going to reach out TRS and YSR Congress after Exit polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X