ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனிதாவை கொடூரமாக தாக்கிய அதே இடத்தில் மரம் நட்டு அதிரடி பதிலடி கொடுத்த வனத்துறை!

Google Oneindia Tamil News

Recommended Video

    அனிதாவை கொடூரமாக தாக்கிய அதே இடத்தில் மரம் நட்டு அதிரடி பதிலடி கொடுத்த வனத்துறை! -வீடியோ

    ஹைதராபாத்: ஆளும் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்ட வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மரம் நடுவதற்காக சென்ற பெண் அதிகாரியை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்எல்ஏவின் தம்பி கொடூரமாக தாக்கிய நிலையில் அதே இடத்தில் மரம் நட்டு அதிரடியாக ஆளும் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளது வனத்துறை.

    தெலுங்கானா மாநிலம் கொமரம் பீம் அஸிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபூர் ககஜ் நகரில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்எல்ஏ கொனேரு கொனப்பா மற்றும் அவரது சகோதரரும் ஜில்லா பரிசித் தலைவரும் ஆக்கிரமித்து இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலங்களை மீட்டு அதில் மரங்களை நடுவதற்காக போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றனர். ஆனால் அவர்களை செல்லவிடாமல் ஆளும் கட்சி எம்எல்ஏ கொனேரு கொனப்பாவின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

    கொடூரம்

    அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நிலையில், திடீரென போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது ஆளும் கட்சி தொண்டர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். இதில் பெண் வன அதிகாரி அனிதா மீதும் கொடூரமாக தாக்குதல் நடைபெற்றது.

    பதிலடி

    பதிலடி

    இதையடுத்து அந்த அதிகாரி உள்பட அதிகாரிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நிலத்தை ஆக்கிரமித்ததோடு பெண் அதிகாரி என்றும் பாராமல் அனிதாவை ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தாக்கியதற்கு பதிலடி கொடுக்க வனத்துறை திட்டமிட்டது.

    அதிகாரிகள்

    அதன்படி எந்த இடத்தில் பெண் அதிகாரியை ஆளும் கட்சியினர் தாக்கினரோ அந்த இடத்தில் 400 வனத்துறையினர் இணைந்து நேற்றைய தினம் மரங்களை நட்டனர். அந்த பணியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் ஈடுபட்டிருந்தனர்.

    பாராட்டு

    பாராட்டு

    சுமார் 20 ஹெக்டேர் நிலப் பரப்பில் மரங்கள் நடப்பட்டன. இதன் மூலம் வருங்காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து இந்த நிலத்தைக் காப்பாற்றலாம் என வனத்துறையினர் நம்புகின்றனர். ஆளும் கட்சியை எதிர்த்து வனத்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்ததற்கும் பதிலடிக் கொடுத்ததற்கும் பாராட்டுகள் குவிகின்றன.

    English summary
    The place where lady range officer was attacked. Plantation was done at same location today by 400 FD, police & other personals. All nearby senior officers were present & 20 hectare was planted to save land from future encroachment. Much required step & befitting reply.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X