ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு எம்எல்ஏ செய்ற வேலையா இது... வீடியோவால் வசமாக சிக்கிய பாஜக எம்எல்ஏ.. தெலுங்கானாவில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    வீடியோவால் சிக்கிய பாஜக எம்எல்ஏ, தெலுங்கானாவில் அதிர்ச்சி

    ராபாத்: பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தன்னை தானே கல்லால் அடித்துக்கொண்டு காயம் ஏற்படுத்திவிட்டு போலீஸ் மீது பழி போட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் வெளியிட்ட வீடியோவில் ராஜா சிங் வசமாக சிக்கியுள்ளார். இதனால் அவருக்காக போலீசை கடுமையாக விமர்சித்த தெலுங்கானா பாஜகவினர் என்ன இப்படி ஆகிவிட்டதே என்று பாஜக எம்எல்ஏ மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

    ராம்ஹார்கை ஆண்ட மன்னர் விக்ரமாதித்யா சிங்கின் மனைவி ராணி அவந்திபாய் லோதி ஆங்கிலேயர்களை எதிர்த்து 1857ம் ஆண்டு 400பேருடன் போர் புரிந்தார். அவருக்கு ஹைதராபாத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ராணி அவந்தி பாய்யின் பழைய சிலையை அகற்றிவிட்டு புதிய சிலையை வைக்கப்போவதாக தெலுங்கானா மாநில பாஜக எம்எல்ஏ ராஜா சிங் அறிவித்தார்.

    என் தம்பி 2012ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்! என் தம்பி 2012ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்!

     ராணி அவந்திபாய் சிலை

    ராணி அவந்திபாய் சிலை

    இதன்படி 200 ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு இரண்டு மணி அளவில் சுதந்திர போராட்ட வீராங்கனையான ராணி அவந்திபாய் சிலை அமைந்துள்ள ஜம்மூராட் பஜார் பகுதியில் ராஜா சிங் எம்எல்ஏ கூடினார். அவர் ராணியின் 20 அடி பழைய சிலையை அகற்றிவிட்டு புதிய சிலையை வைக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது போலீசார், அனுமதி இல்லாமல் சிலையை மாற்றுவது சட்டப்படி தவறு என எச்சரித்துள்ளனர். அப்போது போலீசார் மீது பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்த முயன்றதால் போலீசார தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    அடித்து விட்டதாக புகார்

    அந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தன்னை போலீசார் தாக்கிவிட்டதாக கூறி ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் சேர்ந்தார். இதை கேள்விப்பட்ட தெலுங்கானா பாஜக தலைவர் லக்ஷ்மண் மற்றும் தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்களிடம் ராஜா சிங் பேசுகையில் "நாங்கள் சிலை முன் இருக்கும்போது போலீசார் லத்தியுடன் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் நாங்கள் கற்களை கையில் எடுத்தோம். பின்னர், அவர்கள் எங்களை கடுமையாக தாக்கிவிட்டார்கள் எங்களை இப்படித் தாக்குவதற்கு பதில், அடித்துக் கொன்று இருக்கலாம் என போலீசிடம் கூறி கற்களையும் கொடுத்துவிட்டோம்" இவ்வாறு கூறியிருந்தார்.

    16 வினாடி வீடியோ

    ஆனால் போலீசார் எம்எல்ஏவை தாக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தனர். எனினும் ராஜா சிங்கின் பேச்சை கேட்டுவிட்டு பாஜக தலைவர்கள் அம்மாநில போலீசாரை கடுமையாக விமர்சித்தனர். இதனால் நிலைமை விபரீதமாகிவிட்டததை உணர்ந்த ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் தன் ட்விட்டரில், 16 விநாடிகள் ஓடும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

     போலீஸ் தாக்கவில்லை

    போலீஸ் தாக்கவில்லை

    அந்த வீடியாவை பார்தது தெலுங்கானா மக்கள் மட்டுமல்ல பாஜகவினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் எம்எல்ஏ ராஜாசிங் தனக்கு தானே கல்லால் ஓங்கி அடித்து காயத்தை ஏற்படுத்தும் காட்சி அதில் உள்ளது. போலீஸ் அவரை தாக்கவில்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. பாஜக எம்எல்ஏவின் இந்த செயலால் பாஜகவினர் என்ன இப்படி ஆகிப்போச்சு என அவர் மீது செம்ம காண்டில் இருக்கிறார்கள். இதற்கிடையே போலீசாரை தாக்கியதாக ராஜா சிங் எம்எல்ஏ உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    English summary
    BJP MLA Raja Singh's injuries by 'self-inflicted' after trying to install new Rani Avantibai statue in Hyderabad , says police, released shocking video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X