• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"தொழிலில்" தள்ளி.. நாசம் பண்ணிட்டான்.. மொத்தம் 9 பெண்கள்.. விதவையைகூட விட்டு வைக்காத கொடூரன்..!

|

ஹைதராபாத்: மொத்தம் 9 பெண்களை கல்யாணம் செய்துள்ளார் அருண் என்பவர்.. இந்த 9 பெண்களையும் கொண்டு போய் விபச்சாரத்தில் தள்ளிவிட்டு, காசு பார்த்துள்ளார்.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்தவர் இந்த அருண் குமார்.. சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வருகிறார்.. 11 வருஷத்துக்கு முன்னாடி கீதாஞ்சலி என்ற பெண்ணை காதலித்துள்ளார்.. அவரையே கல்யாணமும் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

செக் மோசடி.. சரத்குமார், ராதிகாவுக்கு தலா 1 வருடம் சிறை தண்டனை. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு செக் மோசடி.. சரத்குமார், ராதிகாவுக்கு தலா 1 வருடம் சிறை தண்டனை. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஆனால் தம்பதி இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.. மனைவியை, கல்யாணம் ஆனதில் இருந்தே பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தி வந்துள்ளார் அருண்.. இது சம்பந்தமான தகராறுகள் அடிக்கடி வந்து போயுள்ளன. அதேசமயம், வேறு பல பெண்களுடன் பழகி கொண்டு இருந்திருக்கிறார் அருண்குமார்.. அவர்களில் சிலரை கீதாஞ்சலிக்கு தெரியாமல் கல்யாணமும் செய்துள்ளார்.. குடும்பமும் நடத்தியுள்ளார்..

குடும்பம்

குடும்பம்

ஆனால், யாரை எல்லாம் கல்யாணம் செய்து குடும்பம் நடத்தினாரோ, அவர்களை எல்லாம், கொண்டு போய் விபச்சாரத்தில் தள்ளி உள்ளார்.. இதற்காகவே புரோக்கர்களை தேடி பிடித்து அவர்களிடம் மனைவிகளை விற்றுள்ளார். இந்த விஷயம், கீதாஞ்சலிக்கு தெரியவந்தது... இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது சம்பந்தமாக விசாரிக்கும்போதுதான், லட்சுமி என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ள அருண் முயன்று கொண்டிருப்பதும் தெரியவந்தது.. லட்சுமி கணவனை இழந்த பெண்ணாம்..

 கீதாஞ்சலி

கீதாஞ்சலி

இதற்கு மேல் பொறுக்க முடியாத கீதாஞ்சலி, பிப்ரவரி 18-ம் தேதி திஷா பகுதி ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார். ஆனால், போலீசில் சரியான விசாரணை நடத்தப்படவில்லை என்கிறார்கள். அதனால் கீதாஞ்சலியும், லட்சுமியும், ஆந்திரா மகளிர் ஆணையத்தை நாடினர்... அங்கு நடந்ததை எல்லாம் எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.. இதையடுத்து, மகளிர் ஆணையம் இந்த புகாரை கையில் எடுத்தது.. மேலும் இதுபோன்றவர்களுக்கு சவுக்கடியை தரவும் திட்டமிட்டது... அதற்காக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் ஏற்பாடு செய்தது.

கல்யாணம்

கல்யாணம்

அப்போதுதான் கீதாஞ்சலியும், லட்சுமியும் அருண் குமார் பற்றி புட்டு புட்டு வைத்தனர். இதுவரை அருண் குமார் 9 கல்யாணங்கள் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் அருண், அவர்களில் சிலரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.. கல்யாணம் ஆகாத சில பெண்களை பல்வேறு பகுதிகளில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்றுள்ளார்... பிடிக்காத பல பெண்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

லட்சுமி

லட்சுமி

இதில் இன்னொரு மேட்டரும் வெளிவந்தது, விதவை பெண் லட்சுமி இருக்கிறாரே, அவர் கணவரை கொன்றதே அருண் குமார்தானாம்.. அவர் பெயர் ராமு.. அருணின் நண்பரும்கூட.. லட்சுமி மீதுள்ள ஆசையால், ராமுவை கொன்றுவிட்டு, தன்னுடன் வசிக்குமாறும், விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் லட்சுமிக்கு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதைதவிர, அருண் ஒரு கஞ்சா பேர்வழியாம்.. பல கஞ்சா கேஸ்கள் பல ஸ்டேஷனில் புகராக உள்ளது என்பது கொசுறு தகவல்.

வழக்கு

வழக்கு

இதையடுத்து, ஆந்திர போலீசார் அருண் குமார் மீது கொலை, கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.. இத்தனை பெண்களை ஏமாற்றி, கல்யாணம் செய்து, பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி, பணம் சம்பாதித்து வரும் இந்த கொடூரனுக்கு நிச்சயம் ஆந்திர முக்கிய புள்ளிகளின் சகவாசமும், உதவியும் கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. அது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது!

English summary
Prostitution and Psycho husband who cheated on 9 women and got married
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X