ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக புகார்.. 13 தமிழர்கள் கைது

ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 13 தமிழர்கள் கைது- வீடியோ

    ஹைதராபாத்: ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    செம்மரக்கடத்தல் தொடர்கதையாகி வரும் நிலையில், அப்பாவி தமிழர்களுக்கு ஊதியத்துடன் பல்வேறு சலுகைகளை கொடுத்து, செம்மரம் வெட்டுவதற்கு சிலர் அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது. செம்மரம் வெட்டிக்கடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள், ஆந்திரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது நினைவிற்குரியது.

    Redwood smuggling: 13 Tamil peoples arrested in Andhra Pradesh

    இந்த நிலையில் திருப்பதி அருகே உள்ள ஐத்தேபள்ளி வனப்பகுதியில், செம்மரங்களை ஏற்ற வந்த வாகனத்துடன் 13 பேரை ஆந்திரா வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். கடந்த மாதம் 26-ம் தேதி, செம்மரம் வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழக தொழிலாளர்கள் 12 பேருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சித்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    அதே போல், கடந்த 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    13 Tamil peoples arrested near Thirupathi. Reported that the redwood was smuggled in Andhra Pradesh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X