ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு ஐபிஎஸ் அதிகாரி பேசும் பேச்சா இது?.. "முகலாய குப்பைகள்".. மீண்டும் சீண்டிய நாகேஸ்வர ராவ்

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நாகேஸ்வர ராவ் சர்ச்சை ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: முகலாய குப்பைகள் என்று விமர்சித்து, பாஜகவுக்கு ஆதரவாக ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் ஓய்வு பெற்ற போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி எம் நாகேஸ்வர ராவ்.

2018ம் ஆண்டில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரின் காரணமாக, 2018-ல் சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டவர்தான் நாகேஸ்வர ராவ்..

ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை

ஆனால், இவர் பதவியேற்ற சில நாட்களிலேயே, ஐசிஐசிஐ கடனுதவி வழக்கு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்த விசாரணை அதிகாரி இடமாற்றம் உள்ளிட்ட 100 அதிகாரிகளின் இடமாற்றங்களுக்கு உத்தரவிட்டு பரபரப்பை கிளப்பியவர்.. கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டிரேடிங் நிறுவனத்தில், ராவின் மனைவி நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்குள் ஆளானவரும்கூட.

 ஓய்வு

ஓய்வு

பணியில் இருந்து ஓய்வு பெற்றும்கூட, தொடர்ந்து இந்துத்துவா கொள்கையின் காரணமாக பணிக்காலத்தின் போது பல்வேறு சர்ச்சைகளிலும் இவர் சிக்கி வருகிறார்.. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியிலேயே பகிர்ந்தும் வருபவர்.. ஒருமுறை இவர் பதிவிட்ட ட்வீட்டில், "டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு கிருஷ்ணா, பாண்டவர்கள் உள்ளிட்ட பெயர்களை வைக்காமல், இஸ்லாமியர்களின் பெயர்களை வைத்துள்ளனர்... டெல்லியை உருவாக்கியவர்களின் உண்மையானவர்களை அவர்கள் மறைத்து விட்டனர் என்று குற்றஞ்சாட்டியிருந்தது சர்ச்சையை கூட்டியது.

 குப்பைகள்

குப்பைகள்

அந்த வகையில் இப்போதும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், ராம ஜென்ம பூமியில் இருந்து முகலாய குப்பைகளை அகற்றிய இந்த புனிதமான ஆண்டு விழாவில், அங்கு மந்திர் மீண்டும் கட்டப்படுவதற்கு வழி வகுத்த திரு. பிவி நரசிம்ம ராவ், திரு. கல்யாண் சிங், திரு. ரீ அசோக் சிங்கால் ஜி மற்றும் அனைவரையும் நான் மரியாதையுடன் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 அனுமதி

அனுமதி

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து, ராமர் கோவிலை கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.. மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இந்த கோயிலை கட்டி வருகிறது... வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்திற்காக இந்த கோவில் திறக்கப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாஜக

பாஜக

எம்பி தேர்தலுக்கு முன்னதாகவே ராமர் கோயில் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டால், அது பாஜகவுக்கு தேர்தலில் பெரிய ஆயுதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி சிறுபான்மையினருக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் ட்வீட் போட்டுள்ளது அடுத்த சர்ச்சையை கிளப்பி வருகிறது..

 அதிகாரி

அதிகாரி

அதுமட்டுமல்ல, ஐபிஎஸ் அந்தஸ்தில் பணியில் இருப்பவர்கள், அறிவியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதலாமே தவிர, அதில் அவர்களது சொந்த கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என்பது நடைமுறை உள்ளது.. அப்படி இருந்தும், இதை நாகேஸ்வர ராவ் மதிக்காமல் தான் பணியில் இருந்த காலத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Removal of Mughal debris from Ram Janma Bhumi, M. Nageswara Rao IPS(R) tweet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X