ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கானா முதல்வரின் நாய் இறந்ததற்கு வழக்கா? ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்வி.. ஷாக்கிங் பதில்!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் வளர்ப்பு நாய் இறந்தது தொடர்பாக பதியப்பட்ட வழக்கு பெரிய சர்ச்சையாகி உள்ளது.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் வளர்ப்பு நாய் இறந்தது தொடர்பாக பதியப்பட்ட வழக்கு பெரிய சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்ட்டுள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மொத்தம் 11 செல்ல நாய்கள் வளர்த்து வருகிறார். இதில் 'ஹஸ்கி' வகையை சேர்ந்த நாய் ஒன்று திடீர் என்று உடல் நிலை பாதிக்கப்பட்டு பலியானது.

இந்த நாய்க்கு அப்பகுதியை சேர்ந்த கால்நடை டாக்டர்கள் லட்சுமி, ரஞ்சித் ஆகியோர் சிகிச்சை அளித்தும் பலனின்றி நாய் இறந்துவிட்டது. அதற்கு உடல் மிகவும் மோசமாக கொதித்து, சிகிச்சை பலனின்றி பலியானது.

என்ன மோசம்

என்ன மோசம்

இதையடுத்து ஆசிப் அலி, பஞ்சரா ஹில்ஸ் போலீசில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகார் அளித்தவர்கள் விவரம் வெளியாகவில்லை. சரியான மருத்துவ சிகிச்சைகள் அளிக்காததால் நாய் இறந்து விட்டது என்று கூறி வழக்கு பதியப்பட்டது. மேலும் இந்திய தண்டனை சட்டம் 429 மற்றும் மிருகவதை தடுப்பு சட்டப்பிரிவு 11(4) ஆகிய 2 பிரிவுகளில் வழக்கும் பதியப்பட்டது.

கேள்வி

கேள்வி

இந்த நிலையில் இந்த எப்ஐஆர் எப்படி போடப்பட்டது, யார் புகார் கொடுத்தது, வழக்கின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது என்று ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. ஜி ஸ்ரீனிவாச ராவ் என்ற சமூக சேவகர் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பினார்.

விசாரணை

விசாரணை

இதற்கு தற்போது ஹைதராபாத் காவல்துறை சார்பாக வித்தியாசமான பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரிக்கப்படும் போது அதுகுறித்த தகவல்களை அளிக்க முடியாது.

பதில் என்ன

பதில் என்ன

வழக்கு விசாரணை முடிந்த பின் மட்டுமே இதுபோன்ற தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும். இப்போது பதில் அளித்த அது விசாரணையை பாதிக்கும். நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்பதால் இப்போது தகவல் அளிக்க முடியாது என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

English summary
RTI answer on Telangana Chief Minister Chandrasekara Rao's Dog's death case may blow your mind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X