ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் எப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மனித பரிசோதனை...டாக்டர் ரெட்டி புதிய தகவல்!!

Google Oneindia Tamil News

ஐதராபாத்: இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் ரஷ்ய தயாரிப்பு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மூன்றாம் கட்ட மனித பரிசோதனை துவங்கும் என்று டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா தயாரித்து இருக்கும் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து மனித பரிசோதனை மேற்கொள்வதற்கும், இந்த மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கும் ஐதராபாத்தில் இருக்கும் டாக்டர் ரெட்டி லேபாரட்டரியுடன் ரஷ்யா சமீபத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்தது. இதையடுத்து இந்தியாவில் மனித பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய அரசிடம் டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

உலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்! ஷாக் தரும் இந்தியா உலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்! ஷாக் தரும் இந்தியா

டாக்டர் ரெட்டி

டாக்டர் ரெட்டி

இந்த நிலையில் இந்தியாவில் மனித பரிசோதனை இன்னும் சில வாரங்களில் துவங்கும் என்று டாக்டர் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் சாப்ரா ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''ரஷ்ய தயாரிப்பு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி நாடு முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இன்னும் சில வாரங்களில் 1000 முதல் 2000 வரையிலான தன்னார்வலர்களிடம் நடத்தப்படும்.

இந்தியா

இந்தியா

இதற்கு முன்னதாக இந்தியாவில் மனித பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் இருந்து அனுமதி கிடைக்க வேண்டும். இது இன்னும் சில வாரங்களில் கிடைத்து விடும் என்று நம்புகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

எப்போது

எப்போது

இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்க டாக்டர் ரெட்டி நிறுவனத்துக்கும், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்த மருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இதை சாப்ரா மறுத்து இருக்கிறார். இந்தியாவில் இந்த மருந்து கிடைப்பதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளது.

பதிவு

பதிவு

இந்தியாவில் 100 மில்லியன் டோஸ் மருந்து தயாரிப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. உலகிலேயே ரஷ்யாதான் முதன் முதலாக ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை பதிவு செய்து இருக்கிறது.

English summary
Russia's Sputnik V vaccine trial will start in few weeks: Dr Reddy's
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X