ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்குப்பதிவு எந்திரங்களை ரஷ்யா ஹேக் செய்கிறது.. பெரிய சதி நடக்கிறது.. சந்திரபாபு நாயுடு புகார்!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ரஷ்யா முறைகேடு செய்து இந்திய லோக்சபா தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ரஷ்யா முறைகேடு செய்து இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடு முழுக்க முதல் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடந்தது.

இந்த தேர்தல் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார். மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக அவர் கூறியுள்ளார்.

நான் பேசவே இல்லை.. யாரோ மிமிக்ரி பண்ணிட்டாங்க.. அதிமுக மாஜி எம்எல்ஏ மீது பாய்ந்தது கேஸ்! நான் பேசவே இல்லை.. யாரோ மிமிக்ரி பண்ணிட்டாங்க.. அதிமுக மாஜி எம்எல்ஏ மீது பாய்ந்தது கேஸ்!

ஆந்திரா எப்படி

ஆந்திரா எப்படி

ஆந்திராவில் தேர்தல் நடந்த போது மொத்தம் 89,000 வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வேலை செய்யாமல் பிரச்சனை செய்தது. பல முக்கிய இடங்களில் இந்த பிரச்சனை நடந்தது. ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினார். பிற மாநில தேர்தலிலும் இப்படி நடக்க வாய்ப்புள்ள்ளது என்று அவர் கூறி இருந்தார்.

பேட்டி என்ன

பேட்டி என்ன

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ரஷ்யா இயக்கி வருவதாக எனக்கு தகவல்கள் வருகிறது. வேறு ஒரு இடத்தில் இருந்து நவீன தொழில்நுட்பம் மூலம் ரஷ்யா இந்த எந்திரங்களை இயக்கி வருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. இதை குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

ஒரு தொகுதி

ஒரு தொகுதி

ஒரு தொகுதியில் வேட்பாளரை தேர்வு செய்ய ரூ.5 கோடியில் இருந்து 10 கோடி வரை பணம் கொடுக்க வேண்டும் என்று நிலை இருக்கிறது. அப்படி பணம் கொடுத்தால் தேர்தலில் அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்று எனக்கு தகவல் வருகிறது. ரஷ்யா இதை வைத்துதான் ஒவ்வொரு நாடுகளையும் கட்டுப்படுத்துவதாக கூறுகிறார்கள்.

ரஷ்யா காரணம்

ரஷ்யா காரணம்

இது உண்மையா, பொய்யா என்று எனக்கு தெரியாது. ஆனால் இதுகுறித்து உடனே விசாரிப்பதுதான் சரியாக இருக்கும். நம் நாட்டின் நிலைமை தற்போது சரியாக இல்லை. இந்த வாக்குப்பதிவு எந்திர பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

English summary
Russians are manipulating EVMs and changing LS elections results, says Chandrababu Naidu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X