ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏமாற்றிய முன்பருவமழை.. 65 ஆண்டுகளில் 2வது முறை.. தென்னிந்திய மக்களுக்கு தாங்க முடியாத பாதிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சில நாட்கள் மட்டுமே தாங்கும் குடிநீர்... என்ன செய்ய போகிறது சென்னை

    ஹைதராபாத்: 65 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தென்னிந்தியா மழை இல்லாமல் கடும் வறட்சியை சந்தித்துள்ளது. பருவ மழைக்கு முந்தைய மழை பொழிவு என்பது இந்த ஆண்டு 47 சதவீதம் குறைந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மைய நிறுவனமாக ஸ்கைமேட் தெரிவித்துள்ளது,

    இந்திய வானிலை ஆய்வுமையம் பருவ மழைக்கு முந்தைய மழை அதாவது முன் பருவ மழை பொழிவு என்பது கடந்த மே1 முதல மே 31 வரையிலான காலகட்டத்தில் 25 சதவீதம் குறைந்துவிட்டதாக கூறியிருந்தது.

    இந்த முன்பருவ மழை பொழிவு பாதிப்பு குறித்து தெலுங்கானாவில் உள்ள என்ஜி ரங்கராவ் வேளாண்மை பல்கலைக்கழக அறிவியல் அறிஞர் பரதிமா கூறுகையில் "முன்பருவ மழை என்பது விவசாயிகள் விதைகளை நடவு செய்தற்கு இயற்கை அளிக்கும் கூடுதல் கால அவகாசம் ஆகும். இதை பயன்படுத்தி தான் நிலக்கடலை, கரும்பு மற்றும் நெல் விவசாயிகள் நிலங்களை உளுது பயிரிடுவார்கள்.

    அழுகிய பொருளை அழகிய டப்பாவில் அடைத்து மார்கெட் செய்ய முடியாது.. மமதாவை சீண்டும் எஸ்வி சேகர்! அழுகிய பொருளை அழகிய டப்பாவில் அடைத்து மார்கெட் செய்ய முடியாது.. மமதாவை சீண்டும் எஸ்வி சேகர்!

     தெலுங்கானா பாதிப்பு

    தெலுங்கானா பாதிப்பு

    ஆனால் இப்போது முன்பருவ மழை குறைந்ததால் விவசாயிகள் நிலத்தடி நீர் இல்லாமல் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி தெலுங்கானா மாநிலம் தான் முன்பருவ மழை இல்லாமல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார். குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்த முன்பருவ மழை இல்லாத பாதிப்பால் மேற்கண்ட மாநிலங்களில் சுமார் 50 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

    2009பிறகு கடும் வறட்சி

    2009பிறகு கடும் வறட்சி

    இதற்கிடையில் தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைகேட் வெளியிட்டுள்ள தகவலில், "முன்பருவ மழை பொழிவு குறைவு என்பது 47 சதவீதம் அளவுக்கு தென்னிந்தியாவில் குறைந்துள்ளது. 2009ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் இப்படி ஒரு வறட்சியை சந்தித்துள்ளது தென்னிந்தியா.

    வடமாநிலங்களில் மழை

    வடமாநிலங்களில் மழை

    அதேநேரம் நாட்டின் பிற பகுதிகளான வடமேற்கு மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், வடக்கு மாநிலங்கள் ஆகியவை முறையே 30 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 14 சதவீதம் அளவுக்கு முன்பருவ மழை இந்த ஆண்டு குறைந்துள்ளது. 2012ம் ஆண்டு நாடு முழுவதும் முன்பருவ மழை பாதிப்பு என்பது 31 சதவீதம் ஆக இருந்தது.

    65ஆண்டுகளில் 2வது முறை

    65ஆண்டுகளில் 2வது முறை

    கடந்த 65 ஆண்டுகளில் 2வது முறையாக இப்படி ஒரு வறட்சியை இந்தியா சந்தித்துள்ளது. 2009 மற்றும 2019 ஆகிய இரண்டுகளுமே எல் லினோ ஆண்டுகள் ஆகும்" இவ்வாறு கூறியுள்ளது.பசுபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்தால் எல் லீனோ தாக்கம் ஏற்படும். இதனால் ஒரு பக்கம் பேய் மழையும் இன்னொரு பக்கம் மழையே இல்லாமலும் போகும்.

    English summary
    second driest pre monsoon season in the last 65 years in india, South Indian states are facing 47 per cent rain deficit in this year
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X