ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சராக அம்பானி குழுமங்களை ஆட்டம் காண வைத்த முதுபெரும் தலைவர் ஜெய்பால் ரெட்டி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்த போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மீது கடும் நடவடிக்கை எடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் மறைந்த ஜெய்பால் ரெட்டி.

1942-ம் ஆண்டு தெலுங்கானாவின் நலகொண்டா மாவட்டத்தில் பிறந்த ஜெய்பால் ரெட்டி, 18 மாத குழந்தையாக இருக்கும்போதே போலியோவால் பாதிக்கப்பட்டார். இதனால் ஊன்றுகோல் உதவியுடனேயே வாழ்நாள் முழுவதும் பயணித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்

ஜனதாவுக்கு தாவல்

ஜனதாவுக்கு தாவல்

1969-ம் ஆண்டு முதல் 19884-ம் ஆண்டு கல்வகுர்த்தி தொகுதி எம்.எல்.ஏவாக 4 முறை தேர்ந்தெடுக்கபப்ட்டார். இந்திரா காந்தியின் அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஜனதா கட்சிக்கு தாவினர். 1980-ல் மேடக் தொகுதியில் இந்திரா காந்தியை ஏதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் ஜெய்பால் ரெட்டி.

இந்திராவை எதிர்த்து போட்டி

இந்திராவை எதிர்த்து போட்டி

1985-88 காலத்தில் ஜனதா தளத்தின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். லோக்சபா எம்.பி.யாக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2 முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்தார். 1999-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸுக்கே திரும்பினார். காங்கிரஸ் கட்சியும் ஜெய்பால் ரெட்டிக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்தது.

அம்பானிக்கு குடைச்சல்

அம்பானிக்கு குடைச்சல்

குஜ்ரால் ஆட்சிக் காலத்தில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். மன்மோகன்சிங் ஆட்சிக் காலங்களிலும் அமைச்சராக இருந்தார். 2012-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமங்கள் மீது நடவடிக்கை எடுத்து பல்லாயிரம் கோடி அபராதம் விதித்தார் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி.

ஜனநாயகவாதி ஜெய்பால் ரெட்டி

ஜனநாயகவாதி ஜெய்பால் ரெட்டி

இதனால் அவரது இலாகா மாற்றப்பட்டு பெரும் சர்ச்சையானது. அம்பானிகளின் சாம்ராஜ்யத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகவாதியாக வாழ்ந்த ஜெய்பால் ரெட்டி 77 வயதில் காலமானார்.

English summary
enior Congress leader, Former Union minister S Jaipal Reddy today passed away.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X