ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி ஷாஹீன் பாக்.. பிப்.8க்கு பிறகு ஜாலியன் வாலாபாக் ஆக மாறலாம்.. ஓவைசி சந்தேகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஷாஹீன் பாக் போராட்டமும்... பின்னணியும்

    ஹைதராபாத்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வரும் டெல்லி ஷாஹீன் பாக், ஜாலியன் வாலாபக்காக வரும் 8ம் தேதிக்கு பிறகு மாறலாம் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    டெல்லி ஷாஹீன் பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இரவு பகலாக ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகிறார்கள்.இந்த போராட்டத்தை கலைக்க இதுவரை இருமுறை துப்பாக்கிச்சூடு நடந்தது.

    Shaheen Bagh may be turned into Jallianwala Bagh after February 8 : says Asaduddin Owaisi

    இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தொலைபேசி வழியாக ஷாஹீன் பாக் போராட்டம் குறித்து ஓவைசியிடம் கேள்வி எழுப்பியது. அதாவது ​​பிப்ரவரி 8 க்குப் பிறகு (டெல்லி தேர்தலுக்கு பிறகு), ஷாஹீன் பாக்கில் இருப்பவர்கள் அகற்றப்படுவதற்காக அறிகுறிகள் அரசாங்கத்திடம் இருந்து வருமான என ஒவைசியிடம் கேட்டது.

    அதற்கு பதிலளித்த ஓவைசி , " மத்திய அரசு அவர்களை சுட்டுக் கொல்லக்கூடும், ஷாஹீன் பாக் ஜாலியன்பாக் ஆக மாறக்கூடும். இது நடக்க வாய்ப்பு உள்ளது.. பாஜக அமைச்சர் துப்பாக்கியால் சுட வேண்டும் என்று ஒருமுறை கூறியிருக்கிறார். எனவே இந்த விவகாரத்தில் யார் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அரசு பதில் அளிக்க வேண்டும் என்றார்.

    அவினாசி சாலையில் சோப்பு போட்டு குளித்து போராட்டம்.. ஆட்சியர் அதிரடியாக செய்த காரியம் இதுதான்! அவினாசி சாலையில் சோப்பு போட்டு குளித்து போராட்டம்.. ஆட்சியர் அதிரடியாக செய்த காரியம் இதுதான்!

    NPR மற்றும் NRC பற்றி மேலும் பேசிய ஓவைசி, "2024 வரை NRC செயல்படுத்தப்படாது என்பதற்கு அரசாங்கம் ஒரு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். அவர்கள் ஏன் NPR க்காக 3900 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள்? நான் ஒரு வரலாற்று மாணவனாக இருந்ததால் இதை உணர்கிறேன். ஹிட்லர் ஆட்சியில் இரண்டு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது, அதன் பிறகு அவர் குறிப்பிட்ட மக்களை எரிவாயு அறைக்குள் தள்ளினார். எனவே இது எங்கள் நாடு (அந்த வழியில்) செல்ல நான் விரும்பவில்லை" இவ்வாறு கூறினார்.

    English summary
    AIMIM chief Asaduddin Owaisi expressed that Shaheen Bagh may be turned into Jallianwala Bagh after February 8 :
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X