ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    அடேய் பாவம் டா அந்த மனுஷன் ! விட்ருங்க டா

    ஹைதராபாத்: ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சீப்புருப்பள்ளி நகரில் வெங்காயம் வாங்க பெரும் அடிதடியே நடந்துள்ளது.

    ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 என்ற அளவில் விற்பனையாகிறது. எனவே, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, மானிய விலையில் வெங்காய விற்பனை செய்கிறது.

    Stampede in Andhra Pradesh market as Jaganmohan Reddys govt sells onions at Rs 25 per kg

    ஆந்திர மாநில அரசு நவம்பர் 15 முதல் 16,000 குவிண்டால் வெங்காயத்தை கொள்முதல் செய்து மானிய விலையில் நுகர்வோருக்கு வழங்க ரூ .10 கோடி ஒதுக்கியுள்ளது.

    இதையடுத்து, சீப்புருப்பள்ளி நகரில், வெங்காயம் வாங்க, ஆண்களும், பெண்களும் போட்டி போட்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒரு முதியவர், நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது வீடியோ காட்சியாக பதிவாகியுள்ளது. அந்த முதியவரை உடன்வந்த சிலர், தூக்கி விட்டு ஆசுவாசப்படுத்தினர்.

    ஆண்களும் பெண்களும் கூட்ட நெரிசலால் அலறியடித்து வெளியே ஓடிவரும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் பசியாலும் பட்டினியாலும் அவதிப்படும் மக்கள் உணவை பார்த்து ஓடுவதை போல பரிதாபகரமான நிலையில் இந்த காட்சிகள் உள்ளன.

    இதனிடையே, தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கண்டித்துள்ளார். நீங்கல்லாம் வெங்காயம் சாப்பிடுபவர்கள், நாங்கள் அப்படி இல்லை என கூறுவது, இந்த அரசின் மனநிலையை காட்டுகிறது என்று சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார்.

    அதேநேரம், சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, மினரல் வாட்டர், ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட மக்களிடம் பணம் இருக்கிறதே என கூறியதை குறிப்பிட்டு, அவர் என்னை விமர்சனம் செய்ய கூடாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    English summary
    Consumers in Cheepurupally town of Vizianagaram district of Andhra Pradesh were seen jumping on one another as the state government was selling onions at Rs 25 per kg.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X