ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்பாவும் மகளும் சந்தித்த நொடி.. உணர்ச்சி வசப்பட்டு காலில் விழுந்த தமிழிசை.. உருக்கமான நிகழ்வு!

தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்றபின் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அப்பாவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான குமரி ஆனந்தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தெலுங்கானா ஆளுநராக நியமணம்... தமிழிசைக்கு குவியும் வாழ்த்துக்கள்

    ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்றபின் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அப்பாவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான குமரி ஆனந்தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

    பாஜகவில் கடந்த 20 வருடமாக சிறப்பாக பணியாற்றியவர் தமிழிசை சௌந்தரராஜன். தமிழக பாஜக தலைவராக இருந்த இவர் தற்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றுக்கொண்டார்.

    தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஹைதராபாத்தில் நடந்த இந்த விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதல் முறையாக ஒலித்த தமிழிசை எனும் நான்.. தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசைமுதல் முறையாக ஒலித்த தமிழிசை எனும் நான்.. தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தமிழிசை பதவியேற்பு விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பெங்கேற்றனர். அதேபோல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    பலர்

    பலர்

    இந்த பதவி ஏற்பு விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சுதீஷ், ஏ.சி.சண்முகம், சரத்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதேபோல் தமிழிசையின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான குமரி ஆனந்தன், அவரின் மனைவி, தமிழிசையின் கணவர் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

    வாழ்த்து தெரிவித்தனர்

    வாழ்த்து தெரிவித்தனர்

    ஆளுநராக பதவியேற்ற தமிழிசையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் வரிசையாக தெலுங்கானா அமைச்சர்கள் தமிழிசைக்கு மலர் கொத்து கொடுத்தனர். பின் தமிழக தலைவர்கள் தமிழிசைக்கு பூங்கோத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    கால்

    கால்

    ஆளுநராக பதவி ஏற்றபின் தமிழிசை நேராக சென்று தனது அப்பாவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான குமரி ஆனந்தன் காலில் விழுந்தார். அப்பாவின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு, அவரின் வாழ்த்து பெற்றார். இவர்கள் இருவரும் 2 நிமிடம் அங்கேயே நின்று உருக்கமாக பேசிக்கொண்டனர்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இதற்கு முன்னதாக சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் தனது அப்பா குமரி அனந்தன் குறித்து பேட்டி அளித்தார். அதில் அரசியலில் பெண்கள் பயணிப்பது கடினம். அதிலும் அப்பாவின் பாதைக்கு எதிராக செல்வது என்பது மிகவும் கடினம். அப்பாவின் வழியில் நான் செல்லவில்லை.

    மாற்றம்

    மாற்றம்

    அப்பாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் ரணப்பட்டு போய் இருக்கிறேன். கண்டதை படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். நான் கண்டதை படித்தேன். இப்போது ஆளுநர் ஆகி இருக்கிறேன், என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilisai Soundararajan gets wishes from her father after taking oath as a governor of Telangana.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X