ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூரத்தில் நானிருந்தாலும் சென்னையை துரத்தும் கொரோனா கவலையடையச் செய்கிறது.. தமிழிசை உருக்கம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தூரத்தில் நானிருந்தாலும் சென்னையை துரத்தும் கொரோனா என்னை கவலையடையச் செய்கிறது என தெலுங்கானா ஆளுநரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்திரராஜன் கவலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து அனைவரும் கவலையில் உள்ளனர். அது போல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தெலுங்கானாவில் ஆளுநராகியதால் அந்த மாநிலத்தில் உள்ள ராஜ்பவனில் அவர் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் தூரத்தில் இருந்தாலும் சென்னையில் கொரோனா பாதிப்பு தம்மை கவலையடையச் செய்கிறது என தமிழிசை ஒரு கவிதை எழுதியுள்ளார்.

Tamilisai Soundararajan writes poem on Corona virus

இதுகுறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்

Tamilisai Soundararajan writes poem on Corona virus

தூரத்தில் நானிருந்தாலும்
சென்னையை துரத்தும் கொரோனா
என்னைக் கவலையடையச் செய்கிறது.

கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால்
கட்டுக்கடங்காமல் தெருவில் இறங்குகிறீர்கள்.

அங்கேயே வீட்டில் இருங்கள் என்றால்
அங்காடிக்குச் செல்கிறோம் என்கிறீர்கள்.

கடைப்பிடியுங்கள் கட்டுப்பாடுகளை என்றால்
கடைக்குப் போகிறேன் என்று கிளம்புகிறீர்கள்...

ஊரடங்கினை கடைப்பிடியுங்கள் என்றால்
ஊருக்குப் போகிறேன் அவசியம் என்கிறீர்கள்...

முகக் கவசம் அணியுங்கள் என்றால்
மூச்சு முட்டுகிறது முடியாதென்கிறீர்கள்...

சமூக இடைவெளி வேண்டும் என்றால்
சங்கடம் இடையில் இது எதற்கு என்கிறீர்கள்.

கை கழுவுங்கள் அடிக்கடி என்றால்
கை கழுவுகிறீர்கள்! அவ்வேண்டுகோளை?

கொரோனா கேட்கிறது
அடங்காமல் நீங்கள் இருந்துவிட்டு
அடங்கவில்லை நான் எனக் கூறுவது சரியா?

எனவே
அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு..
அடித்து விரட்டுவோம் கொரோனாவை என
முடிவெடுங்கள்- முடித்துவையுங்கள் கொரோனாவின் விபரீத விளையாட்டை....

- தமிழிசை சவுந்திரராஜன்.

Tamilisai Soundararajan writes poem on Corona virus
English summary
Telangana Governor Tamilisai Soundararajan writes poem which explains how Chennai affects by Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X