ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர் என்று திருப்பதி சென்ற முதல்வர் பழனிசாமி.. குடும்பத்தோடு சிறப்பு வழிபாடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை தரிசனம் மேற்கொண்டார்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை தரிசனம் மேற்கொண்டார்.

மத்திய பட்ஜெட் காரணமாக நாடு முழுக்க பரபரப்பில் இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியிலும் சிறுசிறு சலசலப்புகள் வந்து செல்கிறது. பாமக இளைஞரணி செயலாளர் எம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான் அடுத்த முதல்வர் என்று பாமக இப்போதே சொல்ல தொடங்கிவிட்டது.

Tamilnadu CM Palanisamy worshipped in Thirumala Tirupati today

அதேபோல் அதிமுக - பாஜக இடையிலும் சண்டை நிலவி வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை தரிசனம் மேற்கொண்டார்.

ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சிறப்பு தரிசனம் நடைபெற்றது. அங்கு இதற்காக சிறப்பான அலங்காரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு இன்று சூரிய பிரபை சேவை நடைபெற்றது.

இது ஆட்சி அதிகாரம், சக்தி கொடுக்கும் வழிபாடு சேவையாகும். இதில் வழிபாடு நடத்தினால், ஆட்சி அதிகாரத்தில் பெரிய அளவில் யோகம் கிடைக்கும். இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் முறை அமல்தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் முறை அமல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு ரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலில் இருந்து வெளியில் வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அதேபோல் கோவிலுக்குள் ரதசப்தமி உற்சவத்தின் முதல் வாகனமான ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவையில் கலந்து கொண்டார். அங்கு சுமார் 15 நிமிடம் முதல்வர் வழிபாடு செய்தார். முதல்வர் மட்டுமே அப்போது வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டார். ரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வாங்கினார்.

English summary
Tamilnadu CM Edappadi Palanisamy worshipped in Thirumala Tirupati today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X