ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கானாவில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து.. மாணவர்கள் ஆல்-பாஸ்.. முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பொதுத்தேர்வு இன்றியே 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், தேர்வு நடத்த முடியாது என்று கூறிய முதல்வர், இன்டர்னல் அஸஸ்மென்ட் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 telangana 10th exam cancelled , students would be promoted based on internal marks

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வழக்கமாக மார்ச் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாக பல மாநிலங்களால் நடத்த இயலவில்லை. 12ம் வகுப்பு தேர்வை கூட பெரும்பாலான மாநிலங்கள் நடத்தி முடித்துவிட்டன. ஆனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த மாநிலங்களால் முடியவில்லை. ஜுன் மற்றும் ஜூலையில் நடத்தலாம் என்று திட்டமிட்டு இருந்தன.

தமிழகத்தில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா .. சென்னை மோசமான பாதிப்புதமிழகத்தில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா .. சென்னை மோசமான பாதிப்பு

ஆனால் கொரானா வைரஸ் பரவுவது உச்ச கட்டத்தை எட்டி வருவதால் பொதுத்தேர்வை நடத்துவது ஆபத்தில் முடியும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் தேர்வை மாநிலங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தன. அதேநேரம் 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படவில்லை. அனைவரும் ஆல் பாஸ் என்று நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்த செய்யப்பபடுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

 telangana 10th exam cancelled , students would be promoted based on internal marks

கொரோனா வைரஸ் பரவிவருவதால் தேர்வை நடத்த முடியாது என்றும், பள்ளி தேர்வு மதிப்பெண்கள் ( இன்டர்னல் அஸஸ்மென்ட் ) அடிப்படையில் கிரேடு வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதனிடையே தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படுமா தள்ளிப்போகுமா, அல்லது ரத்து செய்யப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை. அரசு இன்று உயர்நீதிமன்றத்தில் 10ம் வகுப்பு தேர்வை நடத்த இதுதான் சரியான தருணம் என்று கூறியது. ஆனால் உயர்நீதிமன்றம் 10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க முடியுமா என்று பரிசீலிக்க வேண்டும் என்று கூறியதுடன் வழக்கை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

English summary
Chief Minister K Chandrashekhar Rao has decided that 10th Class students will be promoted to the next class without any examination, as it would not be possible to conduct the examinations due to the spread of Coronavirus in the State: Telangana CMO
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X