ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேசிஆர் பேரு 2 இடத்தில் இருக்கு.. செத்தவங்க 38 பேர் எப்படி ஓட்டு போட்டாங்க.. மல்லுக்கட்டும் காங்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் கே சந்திரசேகர ராவின் பெயர் இரு இடங்களில் இடம்பெற்றுள்ளது என்றும் இறந்த 38 பேர் வாக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் காங்கிரஸ் வேட்பாளர் வந்தேரு பிரதாப் ரெட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிஸோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வந்தேரு பிரதாப் ரெட்டி ஹைதராபாத் உயர்நீதிமன்றத்துக்கு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கஜ்வால் தொகுதி

கஜ்வால் தொகுதி

அதில் மாநிலத்தின் பொறுப்பு முதல்வராக உள்ள சந்திரசேகர ராவ் தன்னை தோற்கடிக்க அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார். தான் போட்டியிட்ட கஜ்வால் தொகுதியில் உயிரிழந்த 38 பேரின் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒப்புகை சீட்டு

ஒப்புகை சீட்டு

அதுபோல் முதல்வராக பொறுப்பு வகித்து வரும் சந்திரசேகர ராவின் பெயரும் இரு இடங்களில் இடம்பெற்றுள்ளன. எனவே கஜ்வால் தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் வாக்குகளை கணக்கிடுவதற்கு பதில் வாக்குப் பதிவு ஒப்புகை சீட்டுகளை (விவிபிஏடி) கணக்கிட உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

அமர்வு

அமர்வு

ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் 20 வாக்குகள் முறைகேடாக புகுத்தப்படும் பட்சத்தில் 7000 வாக்குகளை தான் இழக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகாரை உணவு இடைவேளையின்போது விசாரிக்குமாறு தலைமை நீதிபதி தோட்டா தில் பி ராதாகிருஷ்ணன் மற்று்ம நீதிபதி எஸ் வி பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கோரிக்கை விடுத்தார்.

மறுப்பு

மறுப்பு

அப்போது நீதிபதிகள் கூறுகையில் சந்திரசேகர ராவின் பெயர் இரு இடங்களில் இருந்தாலும் அவர் ஒரு இடத்தில் மட்டுமே வாக்கை பதிவு செய்திருப்பார். எனவே இந்த வழக்கை உணவு இடைவேளையில் விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.

English summary
Telangana Election Results 2018: KCR resorted to foul play, accuses Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X