ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பையனை அனுப்பி போலீசுக்கு அழுத்தம்.. பர்சனலாக வழக்கை பார்வையிட்ட தெலுங்கானா முதல்வர்.. முழு பின்னணி!

ஹைதராபாத்தில் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேரடியாக மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-12-2019 | Morning News | oneindia tamil

    ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேரடியாக மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்காக அவர் தன்னுடைய மகன் கே டி ராமா ராவ் போலீசுடன் இணைந்து பணியாற்ற உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அருகே கால்நடை மருத்துவ பெண்மணி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார். மிக மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர். முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

    ஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்!ஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்!

     என்ன விசாரணை

    என்ன விசாரணை

    இந்த குற்றம் வெளியே தெரிந்த அன்று அது குறித்து தீவிரமாக விசாரணை நடத்துவோம் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டு இருந்தார். அது மட்டுமின்றி இந்த வழக்கை விசாரிக்க 10 தனிப்படை அமைத்தார். முக்கியமாக சைபராபாத் கமிஷ்னர் சஜ்னாரிடம் இது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை செய்தார்.

    மிக தீவிரம்

    மிக தீவிரம்

    இது மட்டுமின்றி டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும் தனது மகனுமான கே டி ராமா ராவையும் சந்திரசேகர ராவ் போலீசுடன் அனுப்பி வைத்தார். போலீசுடன் இருந்து கே டி ராமா ராவ் இந்த வழக்கை மிக தீவிரமாக கவனித்து வந்தார். நேரடியாக அவர் இந்த வழக்கு மீது கவனம் செலுத்தினார்.

    மகன் எப்படி

    மகன் எப்படி

    அது மட்டுமின்றி, 4 பேரையும் கைது செய்தும் கூட கே டி ராமா ராவ் போலீசிடம் இருந்து விலகி வரவில்லை. தொடர்ந்து இந்த வழக்கை, குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்பும் கே டி ராமா ராவ் கவனித்து வந்தார். போலீசுக்கு அவர் இது தொடர்பாக அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

    என்ன அழுத்தம்

    இது தொடர்பாக டிவிட் செய்த கே டி ராமா ராவ், எல்லா குற்றவாளிகளையும் பிடித்துவிட்டோம். ஆனால் இன்னும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம், என்று மிகவும் கோபமாக குறிப்பிட்டு இருந்தார்.

    மக்கள் எப்படி

    மக்கள் எப்படி

    இந்த நிலையில் கட்சி பணிகளை கவனிக்க வேண்டும் என்று கே டி ராமா ராவ் நேற்று முதல் நாள் ஹைதராபாத் சென்றார். அப்போது அவரை சந்தித்த மக்கள் மற்றும் மாணவர்கள் இந்த வன்புணர்வு வழக்கு குறித்து கேட்டுள்ளார். மக்கள் எல்லோரும் அந்த கொலையாளிகள் மீது கோபமாக இருப்பதை உணர்ந்து இருக்கிறார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இது தொடர்பாக கே டி ராமா ராவ் நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் பேசினார். மக்கள் எல்லோரும் கோபமாக இருக்கிறார்கள். இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முதல்வருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    இன்று என்கவுண்டர்

    இன்று என்கவுண்டர்

    அதன்பின்தான் இன்று என்கவுண்டர் நடந்துள்ளது. இதற்கு மக்களின் அழுத்தமும் மிக முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Telangana CM' son KT Rama Rao played a major role in Hyderabad Doctor Murder case and encounter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X