ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதோ.. தொப்பியுடன் சைக்கிளில் வர்றாரே.. யாரு தெரியுதா.. ஆஹா.. அவரேதான்.. ஊரெல்லாம் ஒரே சபாஷ் மழை!

அரசு ஆஸ்பத்திரியில் தெலுங்கானா கலெக்டர் சைக்கிளில் திடீர் ஆய்வு நடத்தினார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இதோ.. தலையில் வெள்ளைத் தொப்பி, வெள்ளை சட்டை, காக்கி நிற பேண்ட் சகிதம் சைக்கிளில் வருகிறாரே.. இவரை பத்திதான் ஊரெல்லாம் பேச்சு!

இதே கெட்டப்பில்.. அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த இவரை பொதுமக்கள் பார்த்து கொண்டே நகர்ந்தனர்.. எங்கோ பார்த்த முகம்.. ஆனால் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

ஆனாலும் தங்களுக்குள் "அவரா இவரு..", "ஓ.. அவரா இருக்குமோ?" என்ற யூகம், சந்தேகங்களுடனேயே பேசிக் கொண்டனர்.

முட்களுக்கிடையே மலராய் மலர்ந்து.. நம் நெஞ்சங்களை கிள்ளி... அழியாத கோலமிட்ட.. மகேந்திரனை பறித்த 2019!முட்களுக்கிடையே மலராய் மலர்ந்து.. நம் நெஞ்சங்களை கிள்ளி... அழியாத கோலமிட்ட.. மகேந்திரனை பறித்த 2019!

போலீஸ்காரர்?

போலீஸ்காரர்?

ஆனால் அந்த நபர் அங்கிருந்த நோயாளிகள் ஒவ்வொருவரிடம் பேசிக் கொண்டும், எதையோ விசாரித்துக் கொண்டும் இருந்தார். தொப்பி, காக்கி நிற பேண்ட்டை பார்த்தால் போலீஸ்காரரை போல இருக்கே என்ற வாதங்களும் முணுமுணுத்தன.. பிறகுதான் எல்லாருமே ஒரு இறுதியான முடிவுக்கு வந்தனர்.

நாராயண ரெட்டி

நாராயண ரெட்டி

அவர் ஒரு கலெக்டர்.. நம்ம ஊர் இல்லை.. தெலுங்கானா.. பெயர் நாராயண ரெட்டி... திடீர்னு நிஜாமாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு இப்படி ஒரு கெட்-அப்பில் விசிட் அடித்துவிட்டார்.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டது மட்டுமல்லாமல், அங்குள்ள குழாய்களில் தண்ணீர் வருகிறதா, வரும் நீரும் சுகாதாரமாக இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்துகொண்டிருந்தார்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

இதன்பிறகு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்களிடமும் அவர்களின் வேலை, மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரம், சுகாதாரமான முறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.. இதில் ஆச்சரியம் பல பேர் கையும் களவுமாக சிக்கியதுதான்.. அவர்களுக்கு எல்லாம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பினார் நாராயண ரெட்டி.

பாராட்டு

பாராட்டு

இதை பற்றி அவர் சொல்லும்போது, "இந்த ஆஸ்பத்திரி ஏற்கனவே பெரிய குறைகள் எதுவும் இல்லாமல் நல்லாதான் செயல்பட்டுட்டு வருது.. இருந்தாலும், இன்னும் முறைப்படுத்தவே இப்படி ஒரு முயற்சி எடுத்தேன்" என்றார்.. எளிய முறையில், மிக சாதாரணமாக சைக்கிளில் திடீரென ஆய்வுக்கு வந்த கலெக்டரை மாவட்ட மக்கள் மனசார பாராட்டி கொண்டே இருக்கிறார்கள்.

English summary
telangana collector cycles to nijamabad government hospital for a surprise visit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X