ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.895 கோடி! டாப் பணக்கார வேட்பாளர்கள் இவர்கள்தான்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, தனது சொத்து மதிப்பு ரூ. 375 கோடி என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு வாகனம் கூட அவருக்கு சொந்தமாக இல்லையாம்.

ஆந்திராவின், கடப்பா மாவட்டத்தில், புலிவென்துலா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது, சொத்து விவரங்களை அவர் சமர்ப்பித்தார்.

ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின், அவரது அசையும், சொத்துக்கள் ரூ. 339 கோடி மதிப்புள்ளவை. அசையா சொத்துக்கள் மதிப்பு, ரூ. 35 கோடி. 2014 ல், அதே தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, ​​ரெட்டி மொத்த சொத்துக்கள் மதிப்பாக ரூ. 343 கோடி என குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்- சத்யபிரதசாஹூ ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்- சத்யபிரதசாஹூ

குண்டு துளைக்காத வாகனங்கள்

குண்டு துளைக்காத வாகனங்கள்

தொழிலதிபரும், ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி மனைவியுமான பாரதி ரெட்டியின் சொந்த மதிப்பு 2014ல் ரூ.71 கோடியாக காண்பிக்கப்பட்டிருந்தது. அது தற்போது ரூ.124 கோடியாக உயர்ந்துள்ளது. அதநேரம், ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான வாகனம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அவரிடம் உள்ள குண்டு துளைக்காத 4 வாகனங்களும் பிறரால் வாங்கப்பட்டவை என்றும், ஆனால், பதிவு செய்யப்பட்ட பெயர் தன்னுடையது என்றும், ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பணக்காரர்

பணக்காரர்

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் செவ்வேலா லோக்சபா தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வேஸ்வர் ரெட்டிக்கு சொத்து மதிப்பு ரூ.895 கோடியாகும். தெலுங்கு பேசும் இரு மாநிலங்களிலும், இவர்தான் பணக்கார வேட்பாளர் என தெரிகிறது. இவரிடம் ரூ.223 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன. இவரது மனைவியும், அப்பல்லோ மருத்துவமனையின் இணை இயக்குநருமான, சங்கிதா ரெட்டியின், அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ.613 கோடியாகும்.

வளர்ச்சி

வளர்ச்சி

அதேநேரம், இவர்கள் குடும்பத்தில் யாருக்கும் சொந்தமான மோட்டார் சைக்கிளோ அல்லது காரோ கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு, தாக்கல் செய்த வேட்புமனுவில் இவரது சொத்து மதிப்பு ரூ.528 கோடியாக இருந்தது. அப்போது அவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சி சார்பில் போட்டியிட்டார். கடந்த டிசம்பர் மாதம், இவர் காங்கிரசில் இணைந்தார்.

செல்வந்தர்கள்

செல்வந்தர்கள்

இதேபோல ஆந்திர அமைச்சர் நாராயணா (நாராயணா குரூப் கல்வி நிறுவன தலைவர்), தனக்கு ரூ.667 கோடி சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர் நெல்லூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மட்டும் கம்மியா என்ன? ரூ.574 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு தனது வேட்புமனுவில் கூறியுள்ளார். ஏழுமலையான் வாழும் தேசத்தில் எவ்வளவு செல்வம் சேர்ந்துள்ளது பாருங்க!

English summary
Konda Vishweshwar Reddy, the Congress party candidate from Telangana's Chevella Lok Sabha constituency, has declared family assets worth Rs 895 crore, making him the richest politician in both the Telugu states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X