ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை வரவேற்று முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி போராட்டங்கள், பேரணிகள், நடைபெற்று வருகின்றன. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சி ஏ ஏ-வ்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளன. அண்மையில் கூட புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவந்தார் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி. இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததற்காக புதுச்சேரி அரசு கவிழ்க்கப்பட்டாலும் கவலையில்லை என அவர் உறுதியோடு செயல்பட்டார்.

Telangana government decide to bring a resolution against CAA

இந்நிலையில் தெலுங்கானா சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்துளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். இது அம்மாநில இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு பாராட்டும் கிடைத்துள்ளது. கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி, ஆகிய மாநிலங்கள் சி ஏ ஏ வை எதிர்த்து தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் அந்த வரிசையில் புதிதாக இணையவுள்ளது தெலுங்கானா.

 "அந்த" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்

குடியுரிமை சட்டம் தொடர்பாகவும், அதனால் நடைபெறும் போராட்டங்கள் குறித்து தெலுங்கானா மாநில அமைச்சரவை நேற்று விவாதித்தது. மாலை தொடங்கிய கூட்டம் இரவு சுமார் 11 மணி வரை தொடர்ந்தது. அந்த கூட்டத்தில் தான் சி ஏ ஏ எதிர்ப்பு தீர்மானம் பற்றி ஒரு மித்த முடிவெடுக்கப்பட்டது. மதத்தை முன்வைத்து குடியுரிமை தரக்கூடாது என்பதிலும், அனைத்து மதத்தினரையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதிலும் தெலுங்கானா அரசு உறுதியுடன் இருப்பதாக கூறியுள்ளது.

இதனிடையே தெலுங்கானா அரசு இப்படி ஒரு முடிவெடுத்துள்ள நிலையில், தமிழக சட்டமன்றத்தில் சி ஏ ஏ எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவர முடியாது என மிக திட்டவட்டமாக கூறியுள்ளார் சபாநாயகர் தனபால்.

English summary
Telangana government decide to bring a resolution against CAA
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X