ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுக்குமொழி, பஞ்ச் டயலாக் மூலம் தமிழில் அசத்திய தமிழிசை.. 15 நாட்களில் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    தெலுங்கானா ஆளுநராக நியமணம்... தமிழிசைக்கு குவியும் வாழ்த்துக்கள்

    ஹைதராபாத்: 15 நாட்களில் தெலுங்கு கற்றுக் கொண்டு அந்த மாநில மக்களுடன் சரளமாக பேசுவேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். அவரது பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    இதையடுத்து அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமன பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    சென்னை திரும்பினார் முதல்வர்.. வந்ததும் வராததுமாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடிசென்னை திரும்பினார் முதல்வர்.. வந்ததும் வராததுமாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி

    ஆளுநர் மாளிகை

    ஆளுநர் மாளிகை

    பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் தமிழிசை. இதையடுத்து தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள தமிழிசை, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார்.

    நட்பு

    நட்பு

    அப்போது தாம் அனைவரிடமும் நட்பாக பழகும் எண்ணம் கொண்டிருப்பதாகவும் அதே நேரத்தில் அதிகாரிகள் கடமைகளை சரிவர செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    யோகா பழகலாம்

    யோகா பழகலாம்

    தினசரி தாம் யோகா செய்து வருவது போல் ஆளுநர் மாளிகை ஊழியர்களும் யோகா செய்து உடல்நலத்தை பேணி காக்க வேண்டும் என்றார். ஆளுநராக பதவியேற்றுக் கொண்டதற்கு முன்பாகவே சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து தெரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    தெலுங்கு மக்களுடன்

    தெலுங்கு மக்களுடன்

    இன்னும் 15 நாட்களுக்குள் தெலுங்கை சரளமாக கற்றுக் கொண்டு மக்களுடன் உரையாட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகள் தமிழில் பெரும் பேச்சுத் திறன், அடுக்குமொழி, இலக்கிய நடை ஆகியவற்றை வெளிப்படுத்தி வந்த தமிழிசை இனி தெலுங்கிலும் அசத்த போகிறார்!

    English summary
    Telangana Governor Tamilisai wants to learn Telugu to interact with people of the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X